இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் மூத்த மகள் திருமண வரவேற்பு விழா மிக ஆடம்பரமாக செங்கல்பட்டில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்தியாவின் பிரபல திரைப்பட பின்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர். ரகுமான். 1990-ம் ஆண்டுகள் முதல் தமிழ் திரையுலகத்திலும், 2000-ம் ஆண்டுகள் முதல் பாலிவுட்டிலும் தனது பின்னணி இசையால் கலக்கி வருகிறார். மேலும், தேசிய விருதுகள் மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி, பாஃப்தா, கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார். இவர், கடந்த 1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு, கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இதில் மூத்த மகள் கதீஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினீயரான ரியாஸ்தீன் சேக்கிற்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்கள் முன்னிலையில், இருவருக்கும் கடந்த மாதம் 5-ம் தேதி மாலை சென்னையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. பிரபலங்கள் யாரும் அழைக்கப்படாதநிலையில், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்து நடத்துவதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆடம்பரமாக நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்துகொண்டார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் நடைபெற்ற ஏ.ஆர். ரகுமானின் மகள், கதீஜா - ரியாஸ்தீனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதுமணத் தம்பதிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
எல்லைகள் மற்றும் தடைகளைத் தாண்டி, தனது ஆத்மார்த்தமான இசையால் மேலும் பல இதயங்களைக் ஒன்றிணைக்க அன்பான ஏ.ஆர். ரகுமானை வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏ.ஆர். ரகுமானின் மகள் திருமண வரவேற்பு விழாவில் பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள் ஷகில்கான், மனீஷா கொய்ராலா, தயாரிப்பாளர் சந்தீப் சிங், பாடகர் சோனு நிஹாம், யோயோ ஹனி சிங் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Manisha Koirala (@m_koirala)
View this post on Instagram
A post shared by India’s Youth & Fitness IC⭕️N® (@sahilkhan)
http://dlvr.it/SS1CJl
Saturday, 11 June 2022
Home »
» ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமண வரவேற்பு விழா - தமிழக முதல்வர், பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு