நபிகள் நாயகம் தொடர்பாக, பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையொட்டி, சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் மற்றும் சில பத்திரிகையாளர்கள்மீது டெல்லி போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், உ.பி-யில் இஸ்லாமிய பக்கிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், தேகூர் கிராமத்தில் உள்ள கோண்டா பகுதிக்குச் சென்ற மூன்று இஸ்லாமிய பக்கிரிகளை வழிமறித்த சில இளைஞர்கள், அவர்களை கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
भीख मांगने गए फ़क़ीर के साथ बदसलूकी एवं उनसे जय श्रीराम कहलवाने का एक वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। वीडियो यूपी गोंडा के खरगूपुर डिंगुर गाँव का बताया जा रहा। महोदय @gondapolice कृपया मामले की जाँच कर आवयश्क कार्रवाई करें… pic.twitter.com/7BEOApYCBe— Ashraf Hussain (@AshrafFem) June 8, 2022
தேகூர் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், இஸ்லாமிய பக்கிரிகளிடம், ``உங்களுடைய பெயர் என்ன... நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்... நீங்கள் ஆதார் அட்டையை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தாக்கப்படுவீர்கள். ஜிஹாதிகள், பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவீர்கள்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் கையில் பெரிய குச்சியுடன் நின்று கொண்டிருக்கிறார். கைது
அவரைச் சுற்றி பலர் நின்று கொண்டிருக்கின்றனர். இஸ்லாமிய பக்கிரிகளிடம் வாக்குவாதம் செய்த அந்த இளைஞர்கள், ஒருகட்டத்தில் அவர்களை மிரட்டி தோப்புக்கரணம் போடவைத்து, ஜெய்ஶ்ரீராம் எனக் கூற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அந்தப் பகுதி காவல்துறையினர் இளைஞர் ஒருவரைக் கைதுசெய்திருக்கின்றனர்.உத்தரப்பிரதேச தேர்தல்: லக்கிம்பூர் சம்பவத்தால் யோகிக்கும், பாஜக-வுக்கும் பின்னடைவா?
http://dlvr.it/SRtkqg
Thursday, 9 June 2022
Home »
» ``தோப்புக்கரணம் போட்டபடி, ஜெய்ஸ்ரீராம் சொல்லுங்கள்..!" - இஸ்லாமிய பக்கிரிகளை துன்புறுத்திய இளைஞர்கள்