நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தொடர்ந்து மூன்று நாள்கள் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை எதிர்த்து அந்தக் கட்சியினர் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக, போலீஸாரும் போராட்டக்காரர்களைக் கைதுசெய்தனர்.
நேற்றைய தினம் மூன்றாவது நாளாக ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அப்போது நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.ஜோதிமணி
இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ``டெல்லி காவல்துறையினர் என்னை கிரிமினல் போல கைதுசெய்திருக்கின்றனர். மேலும், எனது ஆடையை கிழித்திருக்கின்றனர். ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் எங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை. ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மாதிரியான கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' எனப் பேசியிருக்கிறார்.
This is outrageous in any democracy. To deal with a woman protestor like this violates every Indian standard of decency, but to do it to a LokSabha MP is a new low. I condemn the conduct of the @DelhiPolice & demand accountability. Speaker @ombirlakota please act! pic.twitter.com/qp7zyipn85— Shashi Tharoor (@ShashiTharoor) June 15, 2022
இந்த வீடியோவை சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``ஜனநாயகத்தில் இது மாதிரியான செயல்கள் வெறுக்கத்தக்கது. ஒரு பெண் லோக் சபா எம்.பி-யை இப்படி நடத்தியதற்கு டெல்லி போலீஸை கண்டிக்கிறேன். இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.சசி தரூர்
இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி-க்கள் தாக்கப்பட்டது தொடர்பாக மக்களவை சபாநாயகரைச் சந்தித்து காங்கிரஸ் எம்பி-க்கள் இன்று புகார் மனு அளித்திருக்கின்றனர்.``பாஜக ஆளும்போது எதிர்க்கட்சியாக இருப்பதே அசாதாரணமாக இருக்கிறது!" - ஜோதிமணி எம்.பி
http://dlvr.it/SSHyWs
Thursday, 16 June 2022
Home »
» ராகுல் விசாரணையைக் கண்டித்து போராட்டம்; கைதுசெய்யப்பட்ட ஜோதிமணி - சசிதரூர் கண்டனம்!