ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை பிடித்த பொதுமக்கள் அடித்து உதைத்த காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் குப்பம் டி.பி சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் சாலையோரம் தள்ளுவண்டியில் பழச்சாறு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை பெயிண்டர் வேலை செய்து வரும் ஸ்ரீதர் (48) எனபவர் தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து உடல் முழுவதும் காயங்களுடன் வந்த சிறுமியை அப்பகுதி மக்கள் மற்றும் அவரது பெற்றோர்கள் பார்த்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து குப்பம் நகர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்த ஸ்ரீதரை உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த குப்பம் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி குப்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://dlvr.it/SRqNsN
Wednesday, 8 June 2022
Home »
» ஆந்திரா: ரத்த காயங்களுடன் வந்த சிறுமி – விசாரித்ததில் வெளியான கொடூர சம்பவம்