சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் சாலை வழியாக இன்று காலை இளைஞர் ஒருவர் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பைக் அதிகமாக வெப்பமாவதை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக பைக்கை சாலையோரமாக நிறுத்தினார். அப்போது சிறிது நேரத்திலேயே பைக் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், அருகிலிருந்த உணவகத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயன்றார். அங்கு இருந்த பொதுமக்களும் பைக்கில் தண்ணீரை ஊற்றினர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை.
இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். பைக்கில் எப்படி தீப்பிடித்தது என்பது குறித்து உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
http://dlvr.it/SRqNR6
Wednesday, 8 June 2022
Home »
» சாலையில் சென்ற ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென பற்றி எரிந்தது - சென்னையில் பரபரப்பு