கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக (யு.ஏ.இ) தூதரக பார்சல் மூலம் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் வழக்கில், முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பிருப்பதாக, சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்த ஸ்வப்னா சுரேஷ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ``இதுவொன்றும் வெறும் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒன்று அல்ல, நாட்டின் பாதுகாப்பு பற்றியது. தங்கத்துக்காக நாட்டை விற்காதீர்கள். இது சாதாரண குற்றமல்ல, ஊழலின் உச்சம். இதில் முதல்வருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தொடர்பிருப்பதாக, வழக்கில் தொடர்புடைய நபர்களால் கூறப்படுகிறது.
இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும் நிலையில், முதல்வர் தாமாகவே மனசாட்சிப்படி தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுமட்டுமல்லாமல், இந்த வழக்கை மூடிமறைத்ததில், காங்கிரஸுக்கும் பங்கு இருக்குறது” என்று கூறினார்.
முன்னதாக தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த பினராயி விஜயன், ``இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் அஜண்டாவின் ஒரு பகுதிதான். இதற்கு முன்பும் இது போன்று அவர் கூறியிருக்கிறார்" என்று கூறியிருந்தார்.`தங்கம் கடத்தலில் முதல்வருக்கும் பங்கு’ - ஸ்வப்னா சுரேஷ்; `இது அரசியல் அஜண்டா’ - பினராயி விஜயன்
http://dlvr.it/SRtkS4
Thursday, 9 June 2022
Home »
» ``தங்கத்துக்காக நாட்டை விற்காதீர்... பதவி விலகுங்கள்!" - பினராயி விஜயன் மீது பாஜக விமர்சனம்