சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் காரை அறிமுகம் செய்திருக்கிறது நெதர்லாந்தை சேர்ந்த நிறுவனம். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைட்இயர், சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது. 'Lightyear 0' எனப் பெயரிடப்பட்ட இந்த சோலார் கார், 624 கிலோமீட்டர் ரேஞ்ச் கொண்டது ஆகும். 53.8 சதுர அடி அளவில் வளைந்த சோலார் பேனல்கள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 100 கிமீ வேகத்தை 10 நொடிகளுக்குள் எட்டி விடும். இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த காரில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சோலார் ரூஃப், காரை பல மாதங்கள் வரை சார்ஜ் செய்யாமல் இயக்கும் வசதியை வழங்குகிறது.
இந்த காரின் விலை 250,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2 கோடி) வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவு இந்த ஆண்டு இறுதியில் துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் படிக்கலாம்: பேல் பூரிக்கு சர்வதேச அங்கீகாரமா? - வைரல் ட்வீட்டின் காரசார பின்னணி!
http://dlvr.it/SS6lYz
Monday, 13 June 2022
Home »
» சார்ஜ் ஏற்றாமல் பல மாதங்கள் ஓடுமாம் - சூரிய ஓளியில் இயங்கும் உலகின் முதல் கார் அறிமுகம்