ஆன்லைன் மூலம் மோசடி செய்பவர்கள் புதிது புதிதாக எதாவது செய்து கொண்டிருக்கின்றனர். மும்பையில் இதற்கு முன்பு இன்சூரன்ஸ் பாலிசியை புதுபிக்கவேண்டும் என்று கூறியோ அல்லது ஆன்லைனில் மது ஆர்டர் செய்பவர்களிடமோ மோசடி செய்து வந்தனர். இப்போது மும்பையில் புதிதாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி மெசேஜ் அனுப்பி, அதன் மூலம் மோசடி செய்ய ஆரம்பித்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் இந்த மோசடியால் பலர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிதாக நீதிபதி ஒருவரும் இந்த மோசடியில் பணத்தை இழந்திருக்கிறார்.
மும்பை கோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் ரஞ்சித் தேஷ்முக்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒர்லியில் வசித்து வருகிறார். இவரின் மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அதில், `உங்களது மின் கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை. இரவு 9:30 மணிக்கு உங்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும்!' என்று குறிப்பிட்டு, வாடிக்கையாளர் சேவை எண் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. சித்தரிப்பு படம்
அதை உண்மை என்று நம்பிய நீதிபதி, அந்த நம்பருக்கு போன்செய்து தான் ஏற்கெனவே மின் கட்டணத்தை செலுத்திவிட்டதாக தெரிவித்தார். போனில் பேசிய நபர், ``பணம் செலுத்திய விவரம் அப்டேட் செய்யப்படவில்லை" என்றும், தான் அப்டேட் செய்துவிடுவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். சிறிது நேரம் கழித்து அதே நபர் மீண்டும் நீதிபதிக்கு போன்செய்து, ``பணம் செலுத்திய விவரத்தை அப்டேட் செய்ய நீங்கள், நான் அனுப்பும் லிங்க் மூலம் ஒரு ரூபாய் மட்டும் செலுத்துங்கள்" எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் நீதிபதி பணம் செலுத்தியபோது பேமெண்ட் செலுத்துவது பெயிலாகிவிட்டது. இதையடுத்து அந்த நபர் வேறு லிங்க் கொடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டே இருந்தார். நீதிபதியும் அவசரத்தில் மர்ம நபர் சொல்வதை செய்து கொண்டே இருந்தார். ஒருகட்டத்தில் ஏ.டி.எம் கார்டு நம்பர், பின் நம்பரை மர்ம நபர் கேட்டபோது நீதிபதி கொடுத்துவிட்டார். அவர் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.49,500 எடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது. உடனே அதிர்ச்சியடைந்த நீதிபதி போனை கட் செய்துவிட்டு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீஸில் புகார் செய்தார்.
போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், மோசடி பேர்வழிகள் நீதிபதியின் போனை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இந்த மோசடியை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. ரூ.31,000 கோடி மோசடி... மாயமான ‘கிரிப்டோ ராணி’... FBI-ன் ‘மோஸ்ட் வான்டட்’ குற்றவாளியான ரூஜா!
http://dlvr.it/STpcVD
Wednesday, 13 July 2022
Home »
» மும்பை: `மின்கட்டணம் செலுத்தவில்லை’ மெசேஜ்; ஏடிஎம் விவரம் பகிர்ந்த நீதிபதி; ரூ.50,000 அபேஸ்!