ஓ.பி.எஸ். ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, ஈ.பி.எஸ்.-க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம், ஈ.பி.எஸ். ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2452 ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவு பொதுகுழு உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அ.தி.மு.க. ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின் பொழுது, ஈ.பி.எஸ்.-க்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ். ஆதரவு நிலைபாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக ஈ.பி.எஸ். ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை ஈ.பி.எஸ்.-க்கு, 2,443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் ஈ.பி.எஸ். ஆதரவு எண்ணிக்கை 2,452 ஆக அதிகரித்தது.
இதனால் ஓ.பி.எஸ். ஆதரவு எண்ணிக்கை மேலும் குறைந்தது. தேனி மாவட்ட பொருளாளர் சோலை ராஜா, மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி உள்ளிட்டோர் முன்னாள் எம்ல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/STcdPT
Saturday, 9 July 2022
Home »
» சொந்த மாவட்டத்திலேயே காலியாகும் ஓபிஎஸ் கூடாரம் - மேலும் 9 பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவு