கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017-ம் ஆண்டு காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நடிகை பாலியல் வழக்கில் நடிகர் தீலிப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு... பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். நடிகை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் குற்றவாளிகள் வீடியோவாகவும் எடுத்திருந்தனர். அந்த வீடியோ அடங்கிய மெமரி கார்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கோர்ட் கஸ்டடியிலிருந்த அந்த மெமரி கார்டிலிருந்து அந்த பாலியல் வன்கொடுமை வீடியோ வெளியானதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட நடிகை கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் பாலியல் வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு பாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள பாரன்சிக் பரிசோதனை மையத்திலிருந்து பரிசோதனை முடிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு க்ரைம் பிரான்ஞ்ச் வசம் ஒப்படைக்கப்பட்டது.நடிகர் திலீப்
அந்த மெமரி கார்டு கடைசியாக 2021-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி மதியம் 12:19 மணிமுதல் 12:54 மணி வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், விவோ கம்பெனி மொபைல் போனில் போட்டு அந்த மெமரி கார்டிலிருந்து வீடியோ பார்க்கப்பட்டதாகவும் பரிசோதனை முடிவில் தெரியவந்திருக்கிறது. அதே போல, அது வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள ஆப்-கள் பயன்படுத்தப்படும் செல்போன் எனவும் பாரன்சிக் பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது. அந்த மெமரி கார்டில் எட்டு வீடியோ ஃபைல்கள் இருப்பதாகவும், முதன் முதலாக 2018 ஜனவரி 9-ம் தேதி அந்த மெமரிகார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இரண்டாவதாக 2018-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மெமரி கார்டின் ஹாஸ் வேல்யூ மூன்று முறை மாற்றப்பட்டிருப்பது பாரன்சிக் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கைத் தொடக்கத்தில் விசாரித்த அங்கமாலி மாஜிஸ்டிரேட் கோர்ட்டிலும், அதன் பிறகு விசாரணை நடைபெற்ற மாவட்ட நீதிமன்றத்திலும், இப்போது விசாரணை நடைபெற்றுவரும் நீதிமன்றத்தின் கஸ்டடியிலும் மெமரி கார்டு இருந்த சமயத்தில் ஹாஸ் வேல்யூ மாற்றப்பட்டதாகப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. மெமரி கார்டு பாரன்சிக் பரிசோதனை முடிவுகளை க்ரைம் பிரான்ஞ்ச் போலீஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்திருந்தனர். இது சம்பந்தமான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.போலீஸ்
விசாரணையின்போது க்ரைம் பிரான்ஞ்ச் அதிகாரிகளை நோக்கி நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார். ``மெமரி கார்டை பயன்படுத்தி வீடியோ பார்த்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும். அந்த மெமரி கார்டு பொருத்தப்பட்ட விவோ போன் யாருடையது என ஏன் இன்னும் கண்டுபிடிக்கவில்லை? அந்த செல்போனில் ஜியோ சிம் கார்டு பயன்படுத்தியதாகப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதால், டவர் லொகேஷன் வைத்து எளிதில் கண்டுபிடிக்கலாமே" எனக் கேள்வி எழுப்பினார் நீதிபதி. அந்த மெமரி கார்டிலிருந்து வீடியோ பார்க்கிறீர்களா என விசாரணை அதிகாரிகள் நான்கு முறை தன்னை கேட்டதாகவும். அதற்குத் தான் 'நோ' சொல்லிவிட்டதாகவும்.... அந்த வீடியோவை பார்ப்பதில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்தார். கோர்ட்டில் இருந்த மெமரி கார்டை பயன்படுத்தியது யார் எனக் கண்டறியும் படலத்தில் இறங்கியுள்ளனர் க்ரைம் பிரான்ச் போலீஸார். பாலியல் வீடியோ கசிந்த விவகாரம்: விசாரணை கேட்டு நடிகை உயர் நீதிமன்றத்தில் மனு!
http://dlvr.it/SV21NX
Sunday, 17 July 2022
Home »
» நடிகை பாலியல் வழக்கு: கசிந்த வீடியோ... செல்போனை பயன்படுத்தியது யார் என கண்டுபிடிக்க கோர்ட் உத்தரவு!