உத்தரப்பிரதேசம் காஸியாபாத் பகுதியில் வசித்து வருகிறார் பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன். இவர் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உதய்பூர் தையல்காரர் கன்ஹையா லாலின் கொலையாளிகள் குறித்து கூறியதாக சொன்ன வார்த்தைகள் சர்ச்சையானது. அதாவது ராகுல் சொல்லாததை இவர் சொன்னதாக பயன்படுத்தியது சர்ச்சையானது. செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன்
அதைத் தொடர்ந்து, அந்த வீடியோவை பா.ஜ.க தலைவர்களும் பதிவு செய்து ராகுல்காந்தியைக் கடுமையாக விமர்சித்துவந்தனர். அதன்பின்பு, செய்தி தொகுப்பாளர், "இந்த செய்தி பொய்யான தகவல். தெரியாமல் தவறு நிகழ்ந்துவிட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ராய்பூரில், காங்கிரஸ் எம்.எல்.ஏ தேவேந்திர யாதவ், "செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் தவறான வீடியோவை பதிவு செய்துள்ளார் எனவே அவரை கைது செய்ய வேண்டும்" என காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, தொகுப்பாளர் ரஞ்சனுக்கு எதிராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று, காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் இருந்து ஒரு காவல்துறை குழு இந்திரா புரத்தில் உள்ள ரோஹித் ரஞ்சன் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ரோஹித், உத்தரப்பிரதேச பொலீஸாரின் அனுமதி இல்லாமல் வந்திருப்பதாவௌம் தனக்கு உதவி வேண்டும் எனவும் உத்தரப்பிரதேச முதல்வர், மற்றும் அம்மாநில காவல்துறையை கேட்டுக்கொண்டார். இதனால் உத்தரப்பிரதேச காவல்துறையும் அங்கு வந்துள்ளது.காவல்துறை
தொகுப்பாளர் ரஞ்சனை யார் விசாரணைக்கு அழைத்துச் செல்வது என இரு மாநில காவல்துறைகளுக்கு மத்தியில் சச்சரவு எழுந்தது. இறுதியில் நொய்டா செக்டார்-20 காவல் நிலையத்தின் ஒரு குழுவால் அவரின் வீட்டிலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு குற்றம் உறுதியானதைத் தொடர்ந்து ஐபிசி 505 -ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ரோஹித் உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. `இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு பாஜக ஆதிக்கம்தான்' - அமித் ஷாவின் நம்பிக்கைக்குக் காரணம் என்ன?
http://dlvr.it/STVPrm
Thursday, 7 July 2022
Home »
» ராகுல் காந்திக்கு எதிரான செய்தி: தொகுப்பாளரை கைது செய்ய போட்டிபோட்ட இரு மாநில காவல்துறை!