மகாராஷ்டிராவில் மொகலாய மன்னன் ஒளரங்கசீப் நினைவிடம் இருக்கும் ஒளரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் ஆகிய நகரங்களின் பெயரை மாற்றவேண்டும் என்று சிவசேனா நீண்ட காலமாக கோரி வந்தது. மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது கூட்டணி கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணாக இரு நகரங்களின் பெயரை மாற்ற முடியவில்லை. கடைசியாக முதல்வர் பதவியில் இருந்து விலகும் முன்பு கடந்த மாதம் 29-ம் தேதி இரு நகரங்களின் பெயர்களை அமைச்சரவை கூட்டத்தில் மாற்றி உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் புதிதாக வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு இரு நகரங்களின் பெயர் மாற்றத்தை ரத்து செய்தது.
இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இரு நகரங்களின் பெயரை மாற்ற மீண்டும் முடிவு செய்யப்பட்டது. ஒளரங்காபாத் பெயரை சாம்பாஜி நகர் என்றும், உஸ்மனாபாத் நகரின் பெயரை தாராசிவ் என்றும் மாற்ற முடிவு செய்திருப்பதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். முந்தைய அரசு சிறுபான்மை அரசாக இருந்ததால் அந்த அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்பதால் அம்முடிவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய பெயர் மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அமையும் இடம்
மேலும், நவிமும்பையில் அமைய இருக்கும் புதிய விமான நிலையத்திற்கு டிபி பாட்டீல் பெயரை சூட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்தார் முதல்வர். அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூட்டாக அறிவித்தனர். இதற்கு முன்பு சிவசேனா கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போது நவிமும்பை விமான நிலையத்திற்கு பால்தாக்கரே வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
புதிய விமான நிலையத்திற்கு டி.ஆர் பாட்டீல் பெயர் சூட்டவேண்டும் என்று கோரி வந்தனர். தற்போது பால் தாக்கரே பெயரை நீக்கிவிட்டு டி.ஆர் பாட்டீல் பெயர் வைக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
http://dlvr.it/SV0BGb
Saturday, 16 July 2022
Home »
» மகாராஷ்டிரா: விமான நிலையத்துக்கு வைக்கப்பட்ட பால் தாக்கரே பெயரை நீக்கிய ஷிண்டே அரசு!