வேலைக்காக நேர்காணல் சென்ற அலுவலகங்களில் வைத்த எல்லா டெஸ்ட்டிலும் பாஸ் ஆனாலும், சம்பளம் விஷயமாக பேசும் போதும் எல்லாருக்குமே திக் திக் என்றே இருக்கும்.
அப்படியான சூழலில் நம் வீடுகளில் உள்ள அம்மாக்கள் போன்றோர் சம்பளம் குறித்து பேரம் பேசினால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா?
இயல்பாகவே அம்மாக்கள் வியாபாரிகளிடம் பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் கெட்டிக்காரர்களாகவே இருப்பார்கள். அவர்களது அந்த திறமைக்கு பிசினஸ் மேனேஜ்மெண்ட் படித்தவர்களோடவே போட்டியிடலாம் போலவே என எண்ண வைக்கும்.
அந்த வகையில், LinkedIn தளத்தில் நிதேஷ் என்ற டெக்கி ஒருவரின் பதிவு இணையவாசிகளிடையே படு வைரலாகியிருக்கிறது.
அம்மாக்களின் திறமை டெக் உலகின் குறைத்து மதிப்பிடப்பட்ட திறன் என்பதை குறிக்கும் வகையில், #underrated_skill_in_tech என்ற ஹேஷ்டேக்கை இட்டு, அவரது பதிவில், “சம்பளம் குறித்த பேச்சுவார்த்தைக்கு என்னுடைய அம்மாவை அழைத்து வரட்டுமா? இந்த மாதிரியான விவகாரங்களை அவங்கதான் நல்லா டீல் பன்னுவாங்க” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
LinkedIn தளத்திலேயே இந்த பதிவு 1600க்கும் அதிகமானோரால் ஷேர் செய்யப்பட்டுள்ளதோடு, பலரும் நிதேஷின் இந்த பதிவுக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில், “அம்மாக்கள் மட்டும் சம்பள பேச்சுவார்த்தைக்கு வந்தா HR மயங்கி விழுந்துடுவாரு” , “அம்மாக்கள் நிச்சயமாக சிறப்பாக பேரம் பேசி முடிக்கக் கூடியவர்கள்” என நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.
http://dlvr.it/STcJf8
Saturday, 9 July 2022
Home »
» ”இதுக்கு எங்க அம்மாதான் சரிப்பட்டு வருவாங்க” -சம்பள பேரம் குறித்த டெக்கியின் வைரல் போஸ்ட்!