உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் வசிக்கும் 17 வயது சிறுமி ஒருவர் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது குரங்குகள் கூட்டம் வரவே, அங்கிருந்து தன்னை காத்துக்கொள்ளக் கீழே குதித்ததாகக் கூறப்படுகிறது. அதில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. உடனே மீரட்டில் உள்ள கன்கெர்கெடா பகுதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். முதலுதவி முடிந்து மூன்று நாள்களுக்குப் பிறகு, பல்லவ்புரத்தில் உள்ள வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அந்த சிறுமியைக் கொலைசெய்ய அவர் தந்தை திட்டமிட்டிருக்கிறார். அதற்காக அந்த நபர் மருத்துவமனையில் கம்பவுண்டராக பணிபுரியும் தன் பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்துள்ளார்.தந்தை - மகள்
சரியாக தன் மகளைக் கொன்றுவிட்டால் 10 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய அந்த நபர், அதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்தை அந்த கம்பவுண்டருக்கு வழங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் செவிலியர்கள் உதவியுடன் டாக்டர் போல வேடமணிந்து உள்ளே சென்ற கம்பவுண்டர், விஷ ஊசி செலுத்தியுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரும்போது மருத்துவமனை ஊழியர்களிடம் சிக்கியிருக்கிறார். மருத்துவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்து கம்பவுண்டரை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்பு சிசிடிவி-யில் சோதனை செய்தபோது அவர் ஊசி போடுவது பதிவாகியிருக்கிறது.ஊசி
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, கம்பவுண்டருக்கு உதவிய செவிலியர் மற்றும் இருவர் என 4 பேரை காவல்துறையினர் கைதுசெய்தனர். இது தொடர்பான விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விசாரணையில், சிறுமி ஜிம் ட்ரைனர் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். இதைப் பலமுறை தந்தை கண்டித்தும் சிறுமி கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.கைது
அதனால், தன் மகளைக் கொலைசெய்யக் காத்திருந்ததாகவும், சமயம் கிடைத்தபோது அதைப் பயன்படுத்திக்கொண்டதாகவும் சிறுமியின் தந்தை தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து குற்றவாளிகள்மீது IPC பிரிவுகள் 307 (கொலை முயற்சி) மற்றும் 328 (தாமாக முன்வந்து காயப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. விஷ ஊசி செலுத்தப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவர் அடித்துக் கொலை! - கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்
http://dlvr.it/SWGxBQ
Monday, 8 August 2022
Home »
» மகளை விஷ ஊசி போட்டுக் கொல்ல ரூ.10 லட்சம்... போலீஸை அதிரவைத்த தந்தையின் `பகீர்' வாக்குமூலம்!