சென்னையில் நடைபெற்றுவரும் உணவு திருவிழாவில் கலந்து கொண்டு அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 1,100 மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் சமையல் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் அடுப்பில்லாமல் சமைத்துபுதிய உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 3 நாட்கள் உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடைபெற்று வரும் உணவு திருவிழாவில், இரண்டாவது நாளில் அடுப்பில்லா சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரத்து 100 பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிறுதானிய உருண்டை, ஃப்ரூட் சாலட், மசாலா பயிறு உள்ளிட்ட 10 வகையான தின்பண்டங்களை தயார் செய்ய பயிற்சி வழங்கப்பட்டது. பின்னர் மாணவ-மாணவிகள் தாங்களாகவே தின்பண்டங்களை செய்து சாதனை படைத்தனர். 1,100 மாணவர்கள் ஒரே நேரத்தில் உணவு சமைத்த நிகழ்ச்சி, சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
http://dlvr.it/SWccnt
Sunday, 14 August 2022
Home »
» சென்னை உணவு திருவிழாவில் அசத்தல்.. 1,100 மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் சமைத்து உலக சாதனை