செஸ் கிராண்ட் மாஸ்டராகி உள்ளார் தமிழகத்தை சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ்.
தமிழகத்தை சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். 16 வயதான பிரணவ் வெங்கடேஷ், ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அந்தவகையில் 2014-ல் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாம்பியன் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். பின்னர் 2015இல் 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றவர் பிரணவ் வெங்கடேஷ். அதைத்தொடர்ந்து தற்போது அவர் கிராண்ட் மாஸ்டராகவும் உயர்ந்திருக்கிறார்.
,,
தமிழகத்திலிருந்து கிராண்டு மாஸ்டர் அந்தஸ்தை பெறும் 27ஆவது வீரர் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவிலிருந்து 75 கிராண்டு மாஸ்டர்கள் உள்ள நிலையில், அதில் 27 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதசே செஸ் கூட்டமைப்பின் கீழ் 2,500 புள்ளிகளை கடந்து, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு, தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும்.
தொடர்புடைய செய்தி: செஸ் விளையாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்றால் என்ன? அதை பெறுவது எப்படி?
2,400 புள்ளிகளுடன் முக்கிய சர்வதேச தொடர்களில் 3 மூன்று முறை பங்கேற்று, அதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இதே போன்று 2,700 புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைக்கும். இந்தியாவில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளனர்.
இதில் பிரணவ் வெங்கடேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று அசத்தியிருக்கிறார்.
http://dlvr.it/SWCbr9
Sunday, 7 August 2022
Home »
» செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 16 வயதான பிரணவ் வெங்கடேஷ்: தமிழகத்துக்கு மேலுமொரு மகுடம்!