துருக்கியில் இரண்டு வயது சிறுமி தனது உதட்டில் கடித்த பாம்பை மீண்டும் கடித்து கொன்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
துருக்கி நாட்டின் காந்தார் கிராமத்தைச் சேர்ந்த மெஹ்மத் எர்கான் என்பவரது 2 வயது பெண் குழந்தை அவர்களது வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த குழந்தையை பாம்பு ஒன்று தாக்குவதையும் அவள் அதனால் அலறுவதையும் அண்டை வீட்டார்கள் பார்த்துள்ளனர். பதறியடித்து குழந்தையை நோக்கி அவர்கள் சென்ற போது தனது பற்களுக்கு இடையே பாம்பை கடித்தபடி சிறுமி அமர்ந்திருப்பதை பார்த்து அவர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அவ்வூரிலுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். பாம்பு குழந்தையின் கீழ் உதட்டை கடித்திருந்த போதிலும் 24 மணி நேரத்திற்குப் பிறகு பூரண குணமடைந்தவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் குழந்தை தனது பற்களால் கடித்ததால் ஏற்பட்ட காயத்தால் பாம்பு உயிரிழந்துவிட்டது.
குழந்தையை நேரில் பார்க்கும்போது 20 அங்குலம் கொண்ட பாம்பை ஒரு கையில் பிடித்தபடி தனது வாயால் கடித்து கொண்டிருந்ததாக அண்டை வீட்டினர் தெரிவித்தனர். குழந்தையை தாக்கிய பாம்பு என்ன வகை என்று தெரியவில்லை. துருக்கியில் உள்ள மொத்த 45 வகையான பாம்புகளில் 12 விஷத்தன்மை கொண்டவை என்று அறியப்படுகிறது. குழந்தை தற்போது நலமாக இருப்பதால், அவளைக் கடித்த பாம்பு விஷமான வகையை சேர்ந்தது அல்ல என கூறப்படுகிறது.
http://dlvr.it/SWq09f
Thursday, 18 August 2022
Home »
» துருக்கி: தன்னை கடித்த பாம்பை திருப்பிக் கடித்து கொலை செய்த 2 வயது துணிச்சல் சிறுமி!