உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரவி யாதவ் (26) தன்னுடைய சகோதரியுடன் கடந்த சனிக்கிழமை ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்திருக்கிறார். ரயில் ஜிரோலி கிராமம் அருகே வந்தபோது, ரயில் ஊழியர் ஒருவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கியிருக்கிறார். 15 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கு 20 ரூபாய் வேண்டுமென அந்த ஊழியர் கேட்டிருக்கிறார். மேலும், அவர் பான் மசாலா போட்டுக்கொண்டு ரயிலிலேயே துப்பிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரவி யாதவ், ``தண்ணீர் பாட்டிலில் 15 ரூபாய் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, 15 ரூபாய்தான் தருவேன்" எனப் பேசியிருக்கிறார். மேலும், பான் மசாலா எச்சில் துப்பியது தொடர்பாகவும் கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதாகச் சொல்லப்படுகிறது.தண்ணீர் பாட்டில்
இந்தச் சூழலில், ரவி யாதவ், அவரின் சகோதரியுடன் லலித்பூர் ஸ்டேஷனில் இறங்க முயன்றபோது, ரயில் ஊழியர் தன்னுடன் பணிபுரியும் சிலரை அழைத்துக்கொண்டு அவர்களை இறங்கவிடாமல் தடுத்திருக்கிறார். மேலும், ரயில் லலித்பூர் ஸ்டேஷனைக் கடந்ததும் ஓடும் ரயிலிருந்து ரவி யாதவைத் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்டதால், பலத்த காயமடைந்த ரவி யாதவை உள்ளூர் மக்கள் மீட்டு ஜான்சி மருத்துவக் கல்லூரியில் அனுமதித்திருக்கிறார்கள்.ரயில்
அவரின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ரவி யாதவ் சகோதரியின் புகாரின் அடிப்படையில், ரயில் ஊழியர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 323 (தன்னிச்சையாகக் காயப்படுத்துதல்), 325 (கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளைக் காவல்துறை தீவிரமாகத் தேடிவருகிறது.ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தவர் அடித்துக் கொலை! - கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்
http://dlvr.it/SWK9RX
Tuesday, 9 August 2022
Home »
» 5 ரூபாய்க்காக வந்த வாக்குவாதம்: ஓடும் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர்- தேடப்படும் குற்றவாளிகள்