ஆர்.எஸ்.எஸ்-ன் பரிவார் அமைப்பான பாலகோகுலம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் பாலகோகுலம் நிகழ்ச்சியில் சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடங்களில் கலந்துகொள்வார்கள். இந்த நிலையில், பாலகோகுலம் அமைப்பின் சார்பில் கோழிக்கோட்டில் நடைபெற்ற 'பாலகோகுலம் ஸ்வத்வ 2022' என்ற மகளிர் மாநாட்டில் கோழிக்கோடு மாநகராட்சி மேயரான சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பீனா பிலிப் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய பீனா பிலிப், ``குழந்தைகளைப் பராமரிப்பதில் வட இந்தியாவைவிட கேரளா பின் தங்கியிருக்கிறார்" எனக் கூறினார். இது சி.பி.எம் கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பீனா பிலிப்புக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது சி.பி.எம் கட்சித் தலைமை.பாலகோகுலம் நிகழ்சியில் பீனா பிலிப்
இது குறித்து கோழிக்கோடு மாவட்ட சி.பி.எம் செயலாளர் பி.மோகனன், ``கோழிக்கோடு மாநகராட்சி மேயர் பீனா பிலிப் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு அமைப்பு நடத்திய நிகழ்ச்சி மேடையில் கலந்துகொண்டு பேசியது சரியான செயல்பாடு இல்லை. மேயரின் இந்த செயல் சி.பி.எம் கட்சியின் நிலைபாட்டுக்கு முரணானது. சி.பி.எம் இதை ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது... அனுமதிக்காது. எனவேதான் மேயரின் நிலைபாட்டை பகிரங்கமாக நிராகரிக்க சி.பி.எம் முடிவுசெய்திருக்கிறது" என்றார்.நிகழ்ச்சியில் பேசும் பீனா பிலிப்
பாலகோகுலம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து விளக்கமளித்த மேயர் பீனா பிலிப், "அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிருஷ்ணர் சிலைக்கு மாலை அணிவித்தேன். இதை மதம் என்ற ரீதியில் நான் பார்க்கவில்லை. மகளிர் கலந்துகொண்ட கூட்டத்தில் பேச வேண்டும் என அவர்கள் கூறியதால் நான் அதை மறுக்கவில்லை. பிரிவினைவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என கட்சி கூறியிருக்கிறது. ஆனால், அம்மாக்களின் கூட்டமைப்பாக அதை நான் பார்த்தேன்.
இங்கு கூடியிருப்பவர்கள் தேவகியும், யசோதாக்களுமா என தமாசாக கேட்டேன். பாலகோகுலம் என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சார்ந்த அமைப்பு என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பரிவார் அமைப்பு என்பது எனக்குத் தெரியாது. குழந்தைகளை பராமரிப்பதில் வட இந்தியா நன்றாக உள்ளது என்பது எனக்கு அங்குள்ள நண்பர்கள் மூலம் தெரியவந்தது. எனவே அனைத்து குழந்தைகளையும் கிதுஷ்ணரைப் போல பார்த்து வளர்க்க வேண்டும் என அந்தக் கூட்டத்தில் பேசினேன். எடிட் செய்யாத எனது முழுபேச்சை கேட்டால் உண்மை தெரியவரும்" என்றார். மரணத்தின் விளிம்பில் தம்பி; ரூ.46 கோடி நிதி திரட்டிய சிறுமி மரணம் - இது கேரளா துயரம்!
http://dlvr.it/SWGPMn
Monday, 8 August 2022
Home »
» ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சி.பி.எம் மேயர்... கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பு!