கேரளா ஜனபக்ஷம் கட்சியின் தலைவராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ். இவர் அடிக்கடி மதம் தொடர்பாகவும், பெண்கள் விவகாரத்திலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் திருவனந்தபுரத்தில் நடந்த அனந்தபுரி இந்து மகா சம்மேளனத்தில் கிறிஸ்தவ மதம் சார்பில் கலந்துகொண்ட கேரள ஜனபக்ஷம் கட்சி தலைவர் பி.சி.ஜார்ஜ், ``ஓட்டல் நடத்தும் இஸ்லாமியர்கள் உணவில் வேண்டும் என்றே குழந்தை பிறக்காமல் இருப்பதற்கான மருந்தை கலக்கிறார்கள். முஸ்லிம்கள் அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற முயல்கிறார்கள். இஸ்லாமிய மதகுருக்கள் உணவில் மூன்றுமுறை துப்பிய பிறகு அதை பரிமாறுகிறார்கள். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வசிக்கும் இடங்களில் அவர்கள் கடைகளை அமைத்து, இஸ்லாமியர்கள் அல்லாதவர்களின் பணத்தை கவர்ந்து கொண்டுசெல்கின்றனர். இதை இந்துக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என பேசி சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பி.சி.ஜார்ஜ்
லவ் ஜிகாத் குறித்தும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கன்னியாஸ்திரி குறித்தும் பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். மேலும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பலரின் கண்டனங்களுக்கு ஆளானார்.
இதனிடையே 2017-ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீபிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் பி.சி.ஜார்ஜ்.
கோட்டயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய முன்னாள் எம்.எம்.ஏ பி.சி.ஜார்ஜிடம் நடிகை பாலியல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பி.சி.ஜார்ஜ், ``பாதிக்கப்பட்ட நடிகையைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். அவருக்கு நிறைய சினிமா வாப்புகள் வருகின்றன. அவர் தப்பித்துக்கொண்டார். அந்த பிரச்னை (பாலியல்) ஏற்பட்டதால் அவருக்கு லாபம்தான், நஷ்டம் எதுவும் இல்லை. முன்னாள் எம்.எல்.ஏ பி.சி.ஜார்ஜ்
பெண் என்கிற வகையில் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட நஷ்டம் பெரியதுதான். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதில் எனக்கும் வருத்தம் உண்டு. அந்த பிரச்னையால் அவருக்கு பொது விஷயங்களிலும், வேறு (சினிமா) துறையிலும் அவருக்கு லாபம் ஏற்பட்டுள்ளது என்று நான் நம்புகிறேன்" என்றார்.
இவரின் இந்த சர்ச்சை கருத்துக்கு தற்போது பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
http://dlvr.it/SWVdMb
Friday, 12 August 2022
Home »
» ``பாலியல் பிரச்னை ஏற்பட்டதால் நடிகைக்கு லாபம்தான்" - முன்னாள் எம்.எல்.ஏ-வின் சர்ச்சை பேச்சு