கர்நாடகா முழுவதும் விவசாயிகள் வாங்கிய ரூ.50,000 மதிப்பிலான கடனை தள்ளுபடிசெய்ய வி.எஸ்.எஸ்.என் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ரூ.1,300 லஞ்சம் கேட்டதாக சன்னப்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவர், கர்நாடக சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமியிடம் புகார் அளித்திருக்கிறார். அப்போது அமைச்சர் ஜே.சி மதுசாமி, ``விவசாயிகள் மட்டுமல்ல, நான்கூட வங்கி அதிகாரிகளால் கூடுதல் பணத்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் எனக்குத் தெரியும். இந்த அரசை நாங்கள் செயல்படுத்தவில்லை.
கடந்த 8 மாதங்களாக நிர்வகிக்கிறோம் அவ்வளவே. 2023 மாநிலத் தேர்தல்கள் நடைபெறும்போது இந்த விவசாயக்கடனை தள்ளுபடி செய்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்த ஆடியோவை பதிவுசெய்த சமூக ஆர்வலர் ஊடகங்களிடம் வெளியிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து கர்நாடக சட்ட அமைச்சருக்கு கண்டனங்கள் வலுத்துவருகின்றன. பாஜக அமைச்சர் ஜே.சி மதுசாமி
இது தொடர்பாகப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் கவுடா, ``சட்ட அமைச்சர் ஜே.சி.மதுசாமி பேசியது தவறு. அமைச்சர் கூறியது போல் அரசு வெறுமனே நிர்வகிக்கவில்லை. ஒருவேளை அவர் துறை வேண்டுமானால் அப்படி இருக்கலாம்" எனக்கூறினார். மேலும், தோட்டக்கலைத்துறை அமைச்சர் என்.முனிரத்னா, ``சட்ட அமைச்சரின் கருத்துக்காக அவர் ராஜினாமா செய்யவேண்டும். அவர் இதுபோன்ற கருத்துகளைக் கூறக்கூடாது" என வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ``சட்ட அமைச்சர் வேறு ஏதோ ஒரு சூழலில் இப்படி சொல்லியிருக்கிறார். நான் அவருடன் பேசுகிறேன். எனவே அதை தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர் குறிப்பாக சில பிரச்னைகளைப் பற்றி பேசியிருக்கிறார். எனவே, எந்த பிரச்னையும் இல்லை. மற்ற அமைச்சர்களுடனும் பேசுகிறேன்" எனத் தெரிவித்தார். பாஜக அமைச்சர் ஜே.சி மதுசாமி
அமைச்சரின் ஆடியோ மாநில அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி, ``இந்த உரையாடல் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க அரசின் திறமையின்மைக்கு எடுத்துக்காட்டு. அரசின் அலட்சியம், அமைச்சர்களின் திறமையின்மையால், விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அமைச்சர் மதுசாமி வெளிப்படுத்தியிருக்கிறார். பா.ஜ.க அரசு ஊழல் நிர்வாக சேவையாக மட்டுமே செயல்படுகிறது. பொம்மை அரசின் கையாலாகாத்தனத்துக்கும், விவசாயிகளுக்கு அநீதி இழைத்ததற்கும் இதைவிட சிறந்த ஆதாரம் இல்லை" எனக் கடுமையாகச் சாடியிருக்கிறது.கர்நாடகா: `அனைத்து பெண்களையும் அவமதிக்கும் பேச்சு’ - காங்கிரஸ் எம்எல்ஏ குற்றச்சாட்டுக்கு பாஜக பதில்
http://dlvr.it/SWn4QD
Wednesday, 17 August 2022
Home »
» ``அரசை நாங்கள் நடத்தவில்லை!" - பாஜக அமைச்சரின் ஆடியோவால் வெடித்த சர்ச்சை