கேரளாவில் தாயும் மகனும் அரசு பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த அரிகோடு என்னும் பகுதியை சேர்ந்தவர் பிந்து (42 ). இவரது மகன் பெயர் விவேக் (24). இவர்கள் இருவரும் சமீபத்தில், அரசு பணியாளர் தேர்வை எழுதி ஒன்றாக எழுதி உள்ளனர். எழுதியதுடன் மட்டுமில்லாமல், இருவரும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தற்போது அரசு பணியிலும் அவர்கள் சேர உள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, அங்கன்வாடி ஊழியராக பணிபுரிந்து வரும் பிந்து, மகன் விவேக் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, அவரது புத்தகங்களை மகனுடன் சேர்ந்து வாசித்து வந்துள்ளார். அப்படி மகனின் புத்தகங்களை படித்ததே பிந்துவை அரசு தேர்வுக்கு தயாராக தூண்டி உள்ளது. இதன் பின்னர் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து பிந்து படிக்க ஆரம்பித்துள்ள நிலையில், மகனின் கல்லூரி படிப்பிற்கு பின்னர் அவரையும் சேர்த்துள்ளார். 4 முறை அரசு பணியாளர் தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருந்து வந்த பிந்து, தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.இதுகுறித்து பிந்துவின் மகன் கூறுகையில், "நான் தனியாக படிப்பதையே விரும்புகிறேன். மேலும், என் அம்மா எப்போதும் படிப்பதில்லை. நேரம் கிடைக்கும்போதும், அங்கன்வாடிப் பணிகளுக்குப் பிறகும் படிப்பார். நான் முன்பு ஒரு போலீஸ் தேர்வை எழுதியிருந்தேன். துணைப் பட்டியலிலும் எனது பெயர் வந்தது. இம்முறை பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு அதிகம் படித்தேன்" என்றார்.இதையும் படிக்க: மாறிமாறி புகாரளிக்கும் கவிஞர் சினேகன்- நடிகை ஜெயலட்சுமி: என்னதான் பிரச்னை?
http://dlvr.it/SWP1x7
Wednesday, 10 August 2022
Home »
» அரசு தேர்வில் வெற்றி பெற்று தாய் - மகன் சாதனை!