பிக்பாஸ் மூலம் கேரள மக்களுக்கு அறிமுகமானவர் கேரள நடிகை ஜானகி சுதீர். ஜானகி சுதீரும், அம்ரிதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் தன்பால் ஈர்ப்பினை மையமாகக்கொண்ட ஹோலி ஊண்ட் (Holy Wound) சினிமா சமீபத்தில் வெளியானது. அதி தீவிர காதலுக்கு பாலின பாகுபாடு தடையில்லை என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது அந்த படம். சிறு வயதில் ஒருவரை ஒருவர் விரும்பும் இரண்டு பெண்கள் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும்போது ஏற்படும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இந்த சினிமாவில் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் நடிகை ஜானகி சுதீர் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.போட்டோ ஷூட்டில் நடிகை ஜானகி சுதீர்
அந்தப் புகைப்படங்களில், தலையில் சுற்றிக்கட்டிய வெள்ளை மல்லிகைப்பூ, இடுப்பில் வெள்ளை வேட்டி சகிதமாக அமர்ந்திருக்கும் ஜானகி சுதீர், மேலாடை அணியாமல் மார்பை மறைக்கும் விதமாக தங்க நகைகள் அணிந்து போஸ் கொடுக்கிறார்.
இந்த போட்டோவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் பதிவிட்டுவருகின்றனர். இதில் பின்னூட்டம் இட்ட சிலர் `ரன்வீர் கபூர் போட்டோ ஷூட் நடத்தியதற்கு எதிராக வழக்கு பதிந்தவர்கள் இப்போது அமைதியாக இருக்கிறார்கள்' என்றும். `ஆண்கள் போட்டோ ஷூட் நடத்தினால் சர்ச்சை, பெண்கள் போட்டோ ஷூட் நடத்தினால் ட்ரெண்டிங் ஆகிவிடும்' எனவும் சிலர் பதிவிட்டிருந்தனர்.ஜானகி சுதீர் நடித்த சினிமா போஸ்டர்
`உடலுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என இதற்கு முன்பே ஜானகி சுதீர் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/SWk1ld
Tuesday, 16 August 2022
Home »
» மேலாடைக்கு பதில் தங்க நகைகள் அணிந்து போட்டோ ஷூட்; சர்ச்சையில் நடிகை ஜானகி சுதீர்!