கர்நாடகா மாநிலத்தில் உள்ள உத்தர கன்னட மாவட்டத்தில் அதிக அளவில் ஹலக்கி ஒக்கலிகா என்ற ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சில மத சடங்குகளை இச்சமுதாய மக்கள் செய்து வருகின்றனர். மழை கொடுக்கும் கடவுள் இந்திரனை குளிர்விப்பதற்காக இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடந்து வருகிறது. ’தட்டுவே மதுவே’ என்று அழைக்கப்படும் இத்திருமணத்தின் மூலம் மழை அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பெய்யக்கூடாது என்றும், சமமான அளவு மழை பெய்யவேண்டும் என்று இந்திரனை வேண்டி இத்திருமணம் நடத்தப்படுகிறது. சமீபத்தில் அது போன்ற ஒரு திருமணம் நடந்தது. டிராக்டரில் சோறு, லோடு ஆட்டோவில் கறிக்குழம்பு; பெண்கள் கலந்துகொள்ளாத விநோத கிடா வெட்டு திருவிழா!
அங்குள்ள கர்கிவிநாயகா மற்றும் கரியம்மா ஆலயத்தில் நடத்த திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இத்திருமணத்தில் வழக்கமாக மற்ற திருமணத்தில் நடக்கும் அனைத்து சடங்குகளும் நடத்தப்படும். இரண்டு பெண்களில் ஒரு பெண் மணமகளாகவும், ஒரு பெண் மண மகனாகவும் ஜோடிக்கப்படுவர். அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவர். ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் நடக்கும் இத்திருமணத்தில் திருமண உணவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
திருமண விருந்து சாப்பிட்ட பிறகு மற்ற திருமணங்களில் நடப்பது போன்று கிப்ஃட் கொடுக்கப்படுவது வழக்கமாகும். திருமணம் முடிந்த பிறகு இரண்டு மணி நேரத்தில் அது முடிவுக்கு வந்துவிடும், அனைவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டுச்சென்றுவிடுவர். இத்திருமணத்தை காண அண்டை மாநிலத்தில் இருந்து அதிகமானோர் வந்து கலந்து கொள்வது வழக்கம்.
http://dlvr.it/SWkXGd
Tuesday, 16 August 2022
Home »
» பெண்ணுக்கு பெண்ணை மணமுடிக்கும் சடங்கு; இந்திரனுக்கு நடைபெற்ற திருவிழா!