உத்தரப்பிரதேச மாநிலம், பவானிப்பூரைச் சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா (38). இவர் தம்பியின் பெயர் கோவிந்த் மிஸ்ரா (22). கடந்த செவாய்க்கிழமையன்று அரவிந்த் மிஸ்ரா பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதையடுத்து வேறு கிராமத்திலிருந்த அவரின் தம்பி கோவிந்துக்கு உறவினர்கள் அண்ணனின் மரணம் குறித்துத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோவிந்த், புதன்கிழமை அரவிந்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து கோவிந்த் தன்னுடைய உறவினர்களுடன் இரவு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்த் மிஸ்ராவையும் பாம்பு தீண்டியது. அதில் கோவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாம்பு
அவருடன் உறங்கிக்கொண்டிருந்த உறவினர் ஒருவரையும் அந்த பாம்பு தீண்டியிருக்கிறது. அவர் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரணம்
சகோதரர்களின் மரணச் செய்தி காட்டுத் தீபோல பரவியதை அடுத்து, அரசு அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
இந்த நிலையில், அந்த கிராம மக்கள் சிலர் சகோதரர்கள் ஏதோ சாபத்தின் காரணமாக அடுத்தடுத்து பாம்பு தீண்டி இறந்துவிட்டதாக முணுமுணுத்துக்கொண்டிருக்கின்றனர். வகுப்பறையில் மாணவியின் காலைச் சுற்றிய பாம்பு... திக் திக் நிமிடங்கள்; மருத்துவமனையில் சிகிச்சை!
http://dlvr.it/SWCGDy
Sunday, 7 August 2022
Home »
» பாம்பு கடித்து உயிரிழந்த அண்ணன்... இறுதிச்சடங்குக்குச் சென்ற தம்பியும் பாம்பு கடித்து பலியான சோகம்!