காதலர்கள் டேட்டிங் செய்வது தொடர்பான பல வேடிக்கையான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன. அந்த வகையிலான வீடியோதான் தற்போது இணையவாசிகளிடையே வைரலாகி வருகின்றன.
நதிக்கரையோரம் தனிமையில் சந்தித்து நேரத்தை கழித்துக் கொண்டிருந்த காதல் ஜோடியின் வீடியோதான் பரவி வருகிறது. வழக்கமாக நடப்பதுதானே என கடந்துவிடலாம். ஆனால் அதில்தான் ட்விஸ்ட்டே இருக்கிறது.
அதாவது, கரையோரம் அமர்ந்திருந்த அந்த ஜோடியில், காதலன் தனது காதலியின் தலை முடியை கோதிவிட்டு, அதிலிருந்து பேன் இருக்கிறதா என பார்க்கிறார்.
View this post on Instagram
A post shared by memes comedy (@ghantaa)
சில நொடிகளே இருக்கக்கூடிய இந்த வீடியோ, வைரல் பதிவுகளை பகிரும் இன்ஸ்டாகிராம் மீம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவில், பலரும் இதுப்போன்றதொரு காதல் எனக்கு அமைய வேண்டும் என கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
மேலும் இதுதான் உண்மையான காதல், காதலிக்காகவும் காதலுக்காகவும் எதையும் செய்ய தயங்கக் கூடாது என்பதற்கு இதுதான் உதாரணம், இந்த ஆண்டின் சிறந்த காதலன் இவராகத்தான் இருக்கும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.
http://dlvr.it/SWDyyc
Monday, 8 August 2022
Home »
» காதலிக்கு பேன் பார்த்த காதலன்.. இதுதான் உண்மையான காதல் என கொண்டாடும் நெட்டிசன்ஸ்!