குஞ்சக்கோ போபன் கதாநாயகனாக நடித்துள்ள 'ந்நா தான் கேஸ் கொடு' என்ற மலையாள சினிமா இன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. அதில் சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் குறித்து அமைச்சருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடருவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே இன்று இந்த சினிமா குறித்த விளம்பரத்தில் "தியேட்டருக்கு போகும் வழியில் பள்ளம் உண்டு, ஆனாலும் வரவேண்டும்" என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் பெய்த மழையால் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பது பற்றி புகார்கள் எழுந்துள்ள இந்த சமயத்தில், குஞ்சக்கோ போபன் சினிமா விளம்பரம் அரசியலில் கடும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சமூக வலைதளங்களில் சினிமாவுக்கு ஆதரவான கருத்துகளும், குஞ்சக்கோ போபனுக்கு எதிரான கருத்துக்களுமாக அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆளும் CPM கட்சியைச் சேர்ந்தவர்கள் சினிமாவுக்கு எதிராகவும், எதிர்கட்சியினர் ஆதரவாகவும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.'ந்நா தான் கேஸ் கொடு' சினிமா விளம்பரம்
இந்த சினிமா குறித்து பேசிய கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன் "சி.பி.எம் கட்சியின் நாளேடான தேசாபிமானி-யில் முதல் பக்கத்தில் இந்த சினிமா விளம்பரம் வந்துள்ளது. தங்கள் பகுதியில் உள்ள குழிகளின் பொதுமக்கள் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். பள்ளங்களால் விபத்து ஏற்பட்டு பலருக்கு கைகள் முறிந்த நிலை ஏற்பட்டுள்ளது. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும்" என்றார்.
இதுபற்றி கேரளா பொதுப்பணித்துறை அமைச்சர் முகம்மது ரியாஸ் கூறும்போது, "சினிமாவின் விளம்பரத்தையும் சினிமாபோல பார்த்தால் போதும். சாலைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதலில் வடிகால் ஓடைகள் அவசியம். அப்போதுதான் சாலைகள் மோசமாவது தடுக்கப்படும். இரண்டாவதாக காலநிலையால் சாலைகள் மோசமடைகின்றன. அதற்காக புதிய டெக்னாலஜி குறித்து ஆலோசித்து வருகிறோம். விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். ஆலோசனைகளுக்காக பொதுப்பணித்துறை புதிய நடைமுறையை கொண்டுவர உள்ளது" என்றார்.'ந்நா தான் கேஸ் கொடு' சினிமாவில் குஞ்ஞாக்கோ போபன்
தனது சினிமா விளம்பரம் சர்ச்சையானதை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த குஞ்சக்கோ போபன், "இந்த சினிமாவில் பள்ளம் கதையின் கருவாக அமைந்துள்ளது. அந்த பள்ளம் எப்படி ஒரு தொழிலாளியை பாதித்தது என்பதை நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறோம். இது ஒரு அரசையோ, அரசியல் கட்சியையோ மனதில் வைத்து எடுக்கப்பட்ட சினிமா அல்ல. இந்த சினிமாவின் கரு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அதிலும் தமிழ்நாட்டில் நடந்த ஒரு பிரச்னையை மையமாக வைத்தே நாங்கள் சினிமா எடுத்துள்ளோம். அப்படி பார்த்தால் தமிழ்நாடு அரசுக்கு எதிரான சினிமா என விமர்ச்சிப்பார்களோ. இது வரை செய்யாத நல்ல சினிமா செய்துள்ளேன். எனவே அதை நல்லதாகப் பாருங்கள், சர்ச்சையாக்காதீர்கள்" என்றார்.
http://dlvr.it/SWSL7f
Thursday, 11 August 2022
Home »
» ``தியேட்டருக்கு வரும் வழியில் பள்ளம் உண்டு"
கேரள அரசியலில் புயலைக் கிளப்பிய சினிமா!