மும்பை பாந்த்ரா பகுதியில் அதிகப்படியான குடிசைகள் இருக்கின்றன. இந்தக் குடிசைப்பகுதியில் உள்ள கார்மெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றி வருபவர் சாஹித் கான்(24). இதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமி கடந்த 4-ம் தேதி தன் தாயாரிடம் கடைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியில் வந்தார். ஆனால் அதன் பிறகு சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவள் பெற்றோர் அப்பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை உள்ளூர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு விசாரணையை தொடங்கினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது சிறுமியை சாஹித் கான் பேசி அழைத்துச் சென்று இருப்பது தெரியவந்தது. ஒரே பகுதியில் இருவரும் இருந்ததால் சிறுமிக்கு ஏற்கெனவே சாஹித் தெரிந்திருந்தார்.கடத்தல்
ஷாப்பிங் செய்ய உதவி செய்யும்படி கூறி சிறுமியை சாஹித் கான் அழைத்துச் சென்றான். சிறுமியை குர்லா என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பஸ் மூலம் சூரத் கடத்தியது தெரியவந்தது. சாஹித் கான் வேலை செய்த கார்மெண்டில் விசாரித்தபோது அவன் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்று தெரிவித்திருந்தது தெரிந்தது. உடனே சாஹித் கான் வேலை செய்த துணி கம்பெனியில் சாஹித் முகவரி உள்ளிட்ட விவரங்களை பெற்றுக்கொண்ட சிறுமியின் தந்தை தன் மகளை தேடி உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றார். உத்தரப்பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் உள்ள அத்ரோலி என்ற கிராமத்தில் சாஹித் தான் கடத்திய சிறுமியுடன் இருந்தான்.
மும்பை போலீஸார் முதல் தகவல் அறிக்கையை உத்தரப்பிரதேச போலீஸாருக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின் துணையோடு சாஹித் கிராமத்திற்குச் சென்று சிறுமியை அவள் தந்தை மீட்டார். டேக்கன் என்ற இந்திப் படத்தில் கடத்தப்பட்ட மகளை மீட்கும் தந்தையை போன்று சிறுமியின் தந்தை தனி ஒருவனாகச் சென்று தனது மீட்டுக்கொண்டு வந்துள்ளார்.போலீஸ்
கடத்தப்பட்ட சிறுமியிடம் விசாரித்தபோது சாஹித் துணிகள் வாங்க உதவி செய்யும்படி கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. குர்லாவிற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து பஸ் மூலம் சூரத் அழைத்து சென்று அங்கிருந்து ரயில் மூலம் உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றுள்ளான். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகுதான் அதனை உறுதி செய்ய முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். சாஹித் கான் சிறுமியை விட்டுவிட்டு ஓடிவிட்டான். அவனை போலீஸார் தேடி வருகின்றனர். அவன்மீது கடத்தல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. உ.பி: சுங்கச்சாவடி தடுப்பை உடைத்து அடுத்தடுத்து சென்ற 13 டிராக்டர்கள் - அதிரவைக்கும் மணல் மாஃபியா
http://dlvr.it/SY6rBw
Sunday, 11 September 2022
Home »
» மும்பையிலிருந்து உ.பி-க்கு கடத்தப்பட்ட 12 வயது சிறுமி; திரைப்பட பாணியில் மகளை மீட்ட தந்தை!