கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த அபிராமி (12), என்ற சிறுமி கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி பால் வாங்கச் சென்றபோது நாய் கடித்திருக்கிறது. 7 இடங்களில் நாய் கடித்ததால், பத்தனம்திட்டா பொது மருத்துவமனையில் வெறிநாய்க்கடிக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பெருநாடு குடும்ப சுகாதார மையத்தில் இருந்து அவருக்கு அடுத்த இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டது, நான்காவது டோஸ் செப்டம்பர் 10 அன்று செலுத்தப்பட இருந்தது. நாய்
இருப்பினும், அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரியில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ரேபிஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய, புனே மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வைராலஜி ஆய்வகங்களுக்கும் மாதிரிகள் அனுப்பப்பட்டன. இந்த நிலையில், சிறுமி அபிராமி பரிதாபமாக உயிரிழந்தார்.
அபிராமியின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர், ``பெருநாடு மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அவள் மயங்கி கிடந்த போதெல்லாம் தடுப்பூசியின் விளைவால் சிறுமி மயங்கிக் கிடக்கிறாள் என்று மருத்துவமனை ஊழியர்கள் எங்களை நம்ப வைக்க முயன்றனர். இந்த நோய்க்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை என்றும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்" எனக் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.தெருநாய்
கேரளாவில், கடந்த சில வாரங்களில் மட்டும் 5 நபர்கள் நாய் கடித்ததாக மருத்துவமனைக்குச் சென்று, தடுப்பூசி போட்ட பின் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்ட ரேபிஸ் தடுப்பு தடுப்பூசியின் தரம் குறித்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது எனவும், மாவட்டத்தில் தெருநாய்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.தெருநாய் கடித்தால் சோறு போட்டவர்களுக்கு அபராதம்... நீதிமன்ற அதிரடிக்குக் காரணம் இதுதான்!
http://dlvr.it/SYMNsT
Thursday, 15 September 2022
Home »
» கேரளா: தெருநாய் கடித்து இறந்த 12 வயது சிறுமி... தடுப்பூசி போட்டும் தொடரும் மரணம்!