கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சந்தேகல்லூர் கிராமத்தில், தனியார் அமைப்பால் நடத்தப்படும் ஆரம்பப் பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்றுவரும் மாணவன் ஒருவன் பள்ளி சீருடையில் மலம் கழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர் ஹுலிகெப்பா சமையல் நடந்துக்கொண்டிருந்த அறையிலிருந்து கொதிக்கும் நீரை சிறுவனின் மீது ஊற்றியிருக்கிறார். இதனால் அலறிதுடித்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் சிறுவனுக்கு 40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.காயம்
சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருக்கிறான். இது தொடர்பாக காவல்துறை, ``சம்பவம் பற்றிய தகவல்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் இது தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. தற்போது வரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. எங்கள் டீம் பள்ளியை ஆய்வு செய்தது. ஆனால் அது கல்வித் துறையின் கீழ் வருவதால், தானாக புகார் அங்கிருந்து வர வேண்டும், இல்லையென்றால் காவல்துறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க வர வேண்டும். புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என்று தெரிவித்தார்.`அருந்ததிபோல மறுபிறவி எடுப்பேன்’ - திரைப்படம் பார்த்து உடலில் தீ வைத்துக்கொண்ட இளைஞர் உயிரிழப்பு
http://dlvr.it/SY5vgl
Saturday, 10 September 2022
Home »
» கர்நாடகா: ஆடையில் மலம் கழித்த 2-ம் வகுப்பு சிறுவன்; ஆத்திரத்தில் ஆசிரியர் செய்த கொடூரச் செயல்!