2024-ல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இப்போதே அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸில், கன்னியாகுமரி முதல் ஜம்மு-காஷ்மீர் வரை மக்களை நேரில் சந்திக்கும் விதமாக, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி `பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியில் நேற்று தொடங்கிய இந்த யாத்திரையானது சுமார் 150 நாள்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன்
மேலும் ராகுல் காந்தி, இந்த பாதயாத்திரை மூலம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் சுமார் 3,700 கி.மீ கடக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில் ராகுல் காந்தி, தான் எம்.பி-யாக பதவிவகிக்கும் கேரளாவில் 20 நாள்கள் யாத்திரை மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த யாத்திரை குறித்து ஊடகங்களிடம் பேசிய கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், ``20 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட கேரளாவில் 20 நாள்களும், 80 மக்களவைத் தொகுதிகளைக்கொண்ட உத்தரப்பிரதேசத்தில் இரண்டு நாள்களும் இந்த யாத்திரை நடைபெறுவதை அறியவே சுவாரஸ்யமாக இருக்கிறது. மேலும், இது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் தலைசிறந்த உத்தி என்று நம்புகிறேன்" என மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.பிரியங்கா - ராகுல்
இதற்கிடையில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா, ட்விட்டரில் தன்னுடைய புகைப்படத்துடன் `பாரத் ஜோடோ யாத்ரா' போஸ்டரை பதிவிட்டு ட்வீட் செய்திருந்தார். இதற்கு பா.ஜ.க தலைவர் ரவிசங்கர் பிரசாத், ``ராபர்ட் வத்ரா யாத்திரையில் கலந்துகொண்டது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது" என விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.``என்ன செய்தாலும் வேலைக்கு ஆகாது..!" - ராகுல் காந்தி நடைப்பயணம் குறித்து வானதி சீனிவாசன்
http://dlvr.it/SXzDnq
Thursday, 8 September 2022
Home »
» "கேரளாவில் 20 நாள்கள், உ.பி-யில் 2 நாள்கள்; சிறந்த உத்தி!"-ஜோடோ யாத்ரா குறித்து பாஜக தலைவர் கருத்து