உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் ஆக்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ``என் சித்தியின் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களால் ஏழு வயது குழந்தையாக இருந்தபோது நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். வளர்ப்பு மாமா ஒருவர் ஏழு வயதில் முதன்முதலில் பாலியல் வன்கொடுமை செய்தார். நடந்த சம்பவம் முழுவதையும் என்னுடைய சித்தியிடம் கூறினேன். அதன் பிறகு அடிக்கடி வயிறு வலி வராத தொடங்கியது. ஆனால் என் சித்தி எனக்கு மருந்து கொடுத்து, யாரிடமும் சொல்லாமல் இருக்கச் சொன்னார். பாலியல் வன்கொடுமை
பின்னர் இரண்டாவது மாமாவும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதன் பிறகு, என்னால் முடிந்தவரை அவர்களைத் தடுக்க முயற்சித்தேன். அதனால் அதற்கு பின்பு அவர்களால் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முடியவில்லை. ஆனால் என்னை பாலியல் ரீதியாக சீண்டினார்கள். எனக்கு ஜனவரி 2011-ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, நான் என் அம்மாவைச் சந்திக்க வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். இருப்பினும், நான் அதை மீண்டும் நடக்க விடவில்லை. காவல்துறை
அதேநேரம் அவர்கள்மீது போலீஸில் புகாரளிக்க எனக்கு தைரியம் இல்லை. அவர்களின் பாலியல் தொல்லை தொடர்ந்தது. இந்த நிலையில், ராணுவத்தில் பணிபுரிந்த என்னுடைய கணவரால் ஊக்கப்படுத்தப்பட்டேன். அதனால்தான் இப்போது இந்த புகாரை கொடுக்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தப் பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக ஐபிசி பிரிவுகள் 376 (பாலியல் வன்கொடுமை), 323, 504 மற்றும் 506 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனக்கு நடந்த கொடுமை குறித்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸில் புகாரளித்த பெண்ணின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். புதுச்சேரி: வாடகை வீட்டில் பாலியல் தொழில்; 15 வயது சிறுமி வன்கொடுமை - 22 பேர் போக்சோவில் கைது
http://dlvr.it/SYXkW6
Sunday, 18 September 2022
Home »
» 7 வயதில் பாலியல் வன்கொடுமை: 35 வயதில் மாமாக்கள் மீது போலீஸில் புகாரளித்த பெண்! - என்ன நடந்தது?