மகாராஷ்டிரா மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நான்கு சாதுக்கள் கர்நாடகாவின் பிஜாப்பூரில் இருந்து கோயில் நகரமான பந்தர்பூரை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, செல்லும் வழியில் கடந்த திங்கள்கிழமை, மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் தங்கிவிட்டு நேற்று புறப்பட்டிருக்கிறார்கள். தாக்கப்படும் சாதுக்கள்
பயணத்தைத் தொடரும் போது, அவர்கள் ஒரு சிறுவனிடம் வழி கேட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த உள்ளூர் வாசிகளுக்கு இந்த 4 பேரும் குழந்தைக் கடத்தல் கும்பலாக இருக்குமோ என சந்தேகித்திருக்கின்றனர். மேலும், அது தொடர்பாக சாதுக்களிடமும் விசாரித்திருக்கின்றனர். அதில் சாதுக்களுக்கும், உள்ளூர்வாசிகளுக்கும் வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சாதுக்களை உள்ளூர் வாசிகள் தாக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதும், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, மக்களிடமிருந்து சாதுக்களை மீட்டு பாதுக்காப்பான இடத்துக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். காவல்துறை
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, ``காவல்துறைக் குழு தாக்கப்பட்ட சாதுக்கள் தொடர்பாக விசாரித்ததில், உண்மையில் சாதுக்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை உறுதிபடுத்தினோம். குழந்தை கடத்தும் கும்பல் என சந்தேகத்தில் தான் மக்கள் சாதுக்களை தாக்கியிருக்கிறார்கள். இந்த தாக்குதல் குறித்து சாதுக்கள் புகார் அளிக்கவில்லை" எனத் தெரிவித்தனர்.திபெத்திய புத்தமத துறவிகள்... டை அணிந்த பூனை... #NewsInPhotos தொகுப்பு & வடிவமைப்பு - க.குமரகுரு
http://dlvr.it/SYHfvW
Wednesday, 14 September 2022
Home »
» தாக்கப்பட்ட சாதுக்கள்: `குழந்தைக் கடத்தல் கும்பலோ..?' - மக்களின் சந்தேகத்துக்கு காவல்துறை விளக்கம்!