தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.மின் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின் வாரியம் நடவடிக்கை எடுத்துவந்த நிலையில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழக மின் வாரியம் சுமார் ரூ.1.75 லட்சம் கோடி கடனில் இருப்பதால், மின் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மின் வாரியம் தெரிவித்தது. எனினும், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், சிறு, குறு தொழில் நிறுவனத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்திருப்பதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதையும் படிக்க: மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதன் பின்னணி இதுதானாம்
http://dlvr.it/SY4wlS
Saturday, 10 September 2022
Home »
» தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்