கடன் பாக்கிக்காக பறிமுதல் செய்த டிராக்டரை தடுத்து மறித்த கர்ப்பிணி பெண் மீது தனியார் நிறுவன ஊழியர்கள் டிராக்டர் ஏற்றி கொலை செய்துள்ள சம்பவம் ஜார்க்கண்ட மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில், கடன் பாக்கிக்காக தனியார் நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்து ஓட்டிச் சென்ற டிராக்டரில் சிக்கி மூன்று மாத கர்ப்பிணி உயிரிழந்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடனை திருப்பிச் செலுத்தாத விவசாயியின் டிராக்டரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிராக்டர் முன் நின்று அந்த விவசாயியின் மூன்று மாத கர்ப்பிணிப் பெண் மறித்துள்ளார். ஆனாலும், டிராக்டரை ஓட்டிச்சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் அந்தப் பெண் மீது மோதிவிட்டு சென்றுள்ளனர்.
அப்போது டிராக்டர் சக்கரத்தின் அடியில் சிக்கிய அந்த கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக, தனியார் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://dlvr.it/SYVjyq
Saturday, 17 September 2022
Home »
» கடன் நிலுவைக்காக டிராக்டர் பறிமுதல்: தடுத்த கர்ப்பிணி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை