உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்திருக்கிறது. கடந்த 1669-ம் ஆண்டு அவுரங்கசீப் உத்தரவின்படி, அங்கிருந்த ஒரு கோயில் அகற்றப்பட்டு இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்றும் இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஞானவாபி மசூதி
இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் ஐந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைத் தொடர்ந்து, மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பலத்த பாதுகாப்புடன் மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வில் மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அது சிவலிங்கம் கிடையாது, நீரூற்று என்று மசூதி நிர்வாகம் மறுப்பு தெரிவித்த நிலையில்... அந்தப் பகுதிக்கு யாரும் செல்லமுடியாதபடி சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஞானவாபி (ஞானக்கிணறு)
இந்த நிலையில், ஞானவாபி மசூதி நிர்வாகம் 1991-ம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின்படி, மசூதிக்குள் ஆய்வு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் தன்மையை கருதி, வழக்கின் விசாரணையை வாரணாசி சிவில் நீதிமன்றத்திலிருந்து வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று மசூதி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்ட நிலையில், இரண்டு தரப்பு வாதங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. தீர்ப்பு வெளியாகும் நேரத்தில் வாரணாசியில் அதிக அளவு போலீஸ் பாதுகாப்பும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. கியான்வாபி மசூதி
இந்த நிலையில், நேற்றைய தினம் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ், ``மசூதி நிர்வாகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. 5 பெண்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது" என்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார். மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்துக்கள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவிக்க, மசூதி நிர்வாகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகத் தெரிவித்திருக்கிறது.கியான்வாபி மசூதி - காசி விஸ்வநாதர் கோயில் சர்ச்சை... வரலாறு என்ன சொல்கிறது?
http://dlvr.it/SYFq0f
Tuesday, 13 September 2022
Home »
» ஞானவாபி மசூதியும்... உள்ளூர் நீதிமன்ற தீர்ப்பும்! - வழக்கு கடந்து வந்த பாதை