உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி என்ற இடத்தில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வரும் 30 வயது நபருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு , பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துக்கொள்வது வழக்கமாம். ஒரு முறை இருவரும் ஹோட்டலில் சந்தித்து தனிமையில் இருந்தபோது 30 வயது நபர், அதனை வீடியோ எடுத்துக்கொண்டார். பின்னர் அந்த வீடியோவைக் காட்டி 32 வயது நபரிடம் அடிக்கடி மிரட்டிப் பணம் வசூலிக்க ஆரம்பித்தார். அதோடு பணம் கொடுக்கவில்லையெனில் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டினார். இந்த நிலையில், இருவரும் மீண்டும் ஹோட்டலில் சந்தித்துக்கொண்டனர். வீடியோ மிரட்டல்
இந்தச் சந்திப்பின்போது மொபைலில் இருக்கும் அந்தரங்க வீடியோவை அழிக்கும்படி 32 வயது நபர் கேட்டுக்கொண்டார். ஆனால் 30 வயது நபர் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே 30 வயது நபர் தன்னுடன் இருந்த நபரை தாக்க ஆரம்பித்தார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டையில் 32 வயது நபர் தன்னுடன் சண்டையிட்ட 30 வயது நபரின் அந்தரங்க உறுப்பை கூர்மையான ஆயுதத்தால் வெட்டிவிட்டார். சண்டையில் இருவருமே காயமடைந்தனர். போலீஸ்
அதையடுத்து, அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் உறுப்பு வெட்டப்பட்ட நபரின் நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து இன்னும் முறைப்படி புகார் செய்யப்படவில்லை என்றும், விரைவில் வழக்கு பதிவுசெய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஹிமன்சு நிகம் தெரிவித்துள்ளார். சிறுநீர் கழிக்கும்போது தாங்கமுடியாத வலி; ஆணுறுப்பை கோடரியால் வெட்டிய முதியவர்! - அதிர்ச்சி சம்பவம்
http://dlvr.it/SY76Xw
Sunday, 11 September 2022
Home »
» அந்தரங்க வீடியோவைக் காட்டி மிரட்டல்; விபரீதத்தில் முடிந்த தன்பால் ஈர்ப்பாளர்கள் சண்டை!