இனிப்பு, புளிப்பு சுவை கலந்த எலுமிச்சையானது பானங்கள், பொரித்த உணவுகள் போன்ற பெரும்பாலான உணவுகளின் சுவையைக் கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இது தினசரி உணவுகளில் பயன்படுத்தப்படக்கூடிய முக்கியமான உணவுப்பொருளும்கூட. வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையானது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இரும்புச்சத்து உடலில் சேர்வதை ஊக்குவிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் முடியை மிருதுவாக்கவும், உடலிலிருந்து இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
நிறைய நேரங்களில் ஆவி பறக்க பறக்க இருக்கும் சூடான உணவுகளில் சுவையை மெருகூட்ட எலுமிச்சை சாறை சேர்க்கிறோம். ஆனால் இந்த தவறை நான் ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வருவதாக கூறுகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சூடான உணவின்மீது எலுமிச்சை சாறு பிழியக்கூடாது என்கின்றனர். ஏனெனில் சூட்டின்மீது எலுமிச்சை சாறின் உணர்திறன் அதிகமாக இருப்பதால் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் சூட்டில் அழிந்துவிடும் என்கின்றனர்.
வெப்பத்தின்மீது வைட்டமின் சியின் உணர்திறன் அதிகம்
வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலமானது வெப்பம் மற்றும் வெளிச்சம் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள். இது 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே மிக வேகமாக சிதையும் தன்மையுடையது. எனவே சூடான உணவு அல்லது சூடான தண்ணீரில் எலுமிச்சையை சேர்க்கும்போது அது வைட்டமின் மற்றும் நொதிகளை அழித்துவிடும். எனவேதான், காலையில் வெறும் வயிற்றில் சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது பலன் தரும் என்பதே கட்டுக்கதை என்கின்றனர் சில மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இதை காலையில் குடிப்பதால் எந்த பலனையும் பெறமுடியாது என்கின்றனர்.
சிறந்த ஆண்டி ஆக்சிண்டான ஃப்ளவனாய்டுகள் போன்றவையும் எலுமிச்சையிலுள்ள சிட்ரிக் அமிலத்தில் உள்ளன. இதை சூடான தண்ணீரில் சேர்க்கும்போது எந்த நன்மையும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
http://dlvr.it/SYST48
Friday, 16 September 2022
Home »
» சூடான உணவில் எலுமிச்சைச் சாற்றை பிழியக்கூடாது.. காரணம் இதுதான்!?