உத்தரப் பிரதேச மாநிலத்தில் தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய காட்சி வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பர்தானா (Bharthana) ரயில் நிலையத்தின் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையில் ஒருவர் சிக்கிக்கொண்டார். அப்போது ரயில் ஒன்று வேகமாகக் கடந்து சென்றதால், அங்கிருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்நிலையில், ரயில் சென்றதும் தண்டவாளத்தில் இருந்து அந்த நபர் எழுந்து வந்தார். எந்தவித காயமும் இல்லாமல் அவர் உயிர் தப்பியதைப் பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்சிகளை அங்கிருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
http://dlvr.it/SXxRbp
Thursday, 8 September 2022
Home »
» நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே ரயில் வரும்போது சிக்கிய பயணி! திக் திக் நிமிடங்கள்!