மத்தியப் பிரதேசத்தில், பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற பட்டியலின சிறுமி அங்கு அடைத்து வைக்கப்பட்டு, பெல்ட்டால் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகஸ்ட் 27-ம் தேதி விளையாடுவதற்காக வெளியே சென்ற தன்னுடைய 14 வயது மகள் வீடு திரும்பவில்லை என்று பெண் ஒருவர் கோட்வாலி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், ஆகஸ்ட் 30-ம் தேதி வீடு திரும்பிய அந்த சிறுமி, பாபு கான் என்பவர் வலுக்கட்டாயமாகத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று மூன்று நாள்கள் அடைத்துவைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், உடனடியாக சிறுமியுடன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கச் சென்றார். அங்கு காவலர்கள் பாலியல் புகாரளிக்க வந்த தங்களை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.கைது
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், ``என்னுடைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள் என்பது குறித்து புகார் பதிவுசெய்ய நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்றோம். இரண்டு காவலர்கள் என்னுடைய மகளின் வாக்குமூலத்தை மாற்றும்படி அழுத்தம் கொடுத்தனர். மேலும் என்னுடைய மகளை அடித்து துன்புறுத்தினார்கள். மற்றொரு போலீஸ் அதிகாரி என்னை வெளியே அழைத்துச் சென்றார். அதன்பிறகு, என்னுடைய மகளை அடைத்துவைத்து எட்டி உதைத்து, பெல்ட்டால் தாக்கியிருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறேன்’’ என்றார்.
இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 30-ம் தேதி நடந்ததாக புகார் எழுந்த நிலையில், மூன்று போலீஸ் அதிகாரிகள் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் குற்றவாளியான பாபு கான் செப்டம்பர் 3-ம் தேதி கைதுசெய்யப்பட்பட்டார்.மத்தியப் பிரதேசம்: ராமர் அசுரர்களை அழித்த மலைப்பகுதி; தாதுக்களை வெட்டி எடுக்க அரசு தடை!
http://dlvr.it/SY22Gh
Friday, 9 September 2022
Home »
» பாலியல் புகார் அளிக்கச் சென்ற பட்டியலின சிறுமி; அடைத்துவைத்து பெல்ட்டால் அடித்த காவலர்கள்!