உயர் இரத்த அழுத்தம். பொதுவாக ஹைப்பர் டென்ஷன் எனக் கூறப்படுவதுண்டு. தற்போதைய காலகட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் ஒரு பொதுவான சுகாதார நிலையாக இருந்தாலும், இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் ஆபத்தானவையே. ஒருவர் தனது நிலையை கவனத்தில் கொண்டு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் மற்றும் கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பல உறுப்புகளை சேதப்படுத்தும். எனவே, அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
ரத்த அழுத்தத்திற்கு மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையைக் கண்காணிப்பதும் முக்கியம். உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில குறிப்புகள் இங்கே உள்ளன.
1) அதிகளவு உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும்:
அதிகபடியான சோடியம் நிறைந்த உணவை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பின் அளவு அதிகமாக அதிகமாக ரத்த அழுத்தமும் உயரும். இது சமயங்களில் இதய நோய்களை உருவாக்கும் என்பதால் சோடியம் உட்பொருள் கொண்ட உப்பை குறைவாக சேர்த்துக்கொள்வதே நல்லது.
2) டையட்டை கண்காணிக்க வேண்டும்:
எல்லாரும் ஒரே மாதிரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியதில்லை. ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுறுத்தலின், வழிகாட்டுதலின் படி உணவு முறைகளை திருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்த அழுத்தம் இருப்பவர்கள் Mediterranean உணவு முறையை கடைபிடிக்கலாம். அதாவது அதிகளவு காய்கறிகள், பழங்களும், சமையலுக்கு ஆலிவ் ஆயிலும், நட்ஸ், தானிய வகைகளை உண்ணலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
3) உடற்பயிற்சி அத்தியாவசியம்:
உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறாரோ இல்லையோ, தவறாமல் உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் அவசியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, ஹைப்பர் டென்ஷனில் இருந்து தப்பிக்கலாம்.
4) எடையைக் கண்காணிப்பு:
பெரும்பாலும் பருமன் மற்றும் அதிக உடல் எடையை கொண்டிருப்போர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆகவே எடையை கண்காணித்து அதை சீராக வைத்திருப்பது முக்கியம்.
http://dlvr.it/SY82J8
Sunday, 11 September 2022
Home »
» ஹைப்பர் டென்ஷனை மேனேஜ் பண்ண முடியாமல் தவிக்கிறீர்களா? - ஈசி வழிகள் இதோ!