பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற பி.எஃப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் நடந்த என்.ஐ.ஏ சோதனையைத் தொடர்ந்து அந்த அமைப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. நாட்டுக்கு எதிராக பயங்கவாத அமைப்புக்கு நிதி கைமாறியதாக பி.எஃப்.ஐ அமைப்பு மீது குற்றச்சாட்டு எழுந்ததுதுடன் என்.ஐ.ஏ சோதனையில் அதற்கான ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பி.எஃப்.ஐ அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டுவருகின்றன. பி.எஃப்.ஐ அமைப்பு கேரள மாநிலத்தில் தொடங்கப்பட்டது என்பதால் என்.ஐ.ஏ அமைப்பு அந்த மாநிலத்தில் தொடர்ந்து தகவல்களைத் திரட்டிவருகிறது. துறைமுகத்துறை அமைச்சர் அஹமத் தேவர் கோவிலுக்கும் (Ahamed Devarkovil) பி.எஃப்.ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கிடையில், பி.எஃப்.ஐ அமைப்புடன் கேரள மாநில காவல்துறையில் 873 போலீஸாருக்குத் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ பட்டியலிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.கேரள டிஜிபி அனில் காந்த்
இந்த நிலையில், கேரள போலீஸ் உயரதிகாரிகள் இந்தத் தகவலைத் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றனர். போலீஸாருக்கும், பி.எஃப்.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனவும், சில ஊடகங்களில் தவறான தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும் தற்போது போலீஸ் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது.
http://dlvr.it/SZgYwg
Friday, 7 October 2022
Home »
» `பி.எஃப்.ஐ அமைப்புடன் 873 போலீஸாருக்குத் தொடர்பா?’ - திட்டவட்டமாக மறுக்கும் கேரள போலீஸ்