மத்தியப் பிரதேச மாநிலத்தில் பள்ளியொன்றில், சட்டவிரோதமாக மஸார்(Mazar) போன்ற வடிவில் மேடை அமைக்கப்பட்டதாக, பள்ளியின் முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. மஸார் என்பது முஸ்லிம் கல்லறை என்று பொருள்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவிலுள்ள ஒரு பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர் பலிராம் சாஹு என்பவர், பள்ளியின் முதல்வர் ஷைனா ஃபிர்தௌஸ்மீது அவரின் கணவரான ஓய்வுபெற்ற ஆசிரியர் பன்னே கான் சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி வளாகத்தில் மேடையொன்றைக் கட்டியதாக புகாரளித்திருந்தார்.பள்ளி
அதைத் தொடர்ந்து பலிராம் சாஹுவின் குற்றச்சாட்டின்பேரில் இதனை விசாரிக்க வியாழன்று, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ பள்ளிக்கு வருகை தந்ததையடுத்து, பள்ளியின் முதல்வர் ஷைனா ஃபிர்தௌஸுக்கு பணியிடை நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பள்ளியில் கடுமையான முறைகேடுகளைக் கண்டறிந்திருப்பதாகவும், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரியங்க் கனூங்கோ தெரிவித்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ஷைனா ஃபிர்தௌஸ் இதற்குமுன், சரஸ்வதி சிலையை வளாகத்தில் அனுமதிக்க மறுத்ததாகவும், தேசிய கீதம் மற்றும் பாடலை பாட விடாமல் மாணவர்களைத் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை மறுத்த ஷைனா ஃபிர்தௌஸ், ஒரு சில ஆசிரியர்கள் இதில் சதி செய்ததாகவும், உள்ளூர் மக்களும், மாணவர்களும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.மத்தியப் பிரதேச கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர்
பின்னர் சம்பவம் குறித்துப் பேசிய மத்தியப் பிரதேச கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ``முதலில், வளாகத்தில் ஏதேனும் கட்டுமானம் இருந்தால், அதற்கு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். எனவேதான் நாங்கள் அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறோம். முதற்கட்ட விசாரணையின்படி, மஸார் போன்ற அமைப்புடன் கூடிய மேடை இருக்கிறது. ஆனால், அது முற்றிலுமாக மஸார் போல இல்லை. இருப்பினும், வளாகத்தில் அதை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறினார்.ஒழுங்கீனம்... பாலியல் அத்துமீறல்... பாதுகாப்பின்மை... அரசுப் பள்ளி மாணவிகள் விடுதி அவலம்!
http://dlvr.it/SZjwwP
Saturday, 8 October 2022
Home »
» `மஸார்' வடிவில் மேடை... தேசிய கீதம் பாடவிடாமல் மாணவர்களை தடுத்ததாக பள்ளி முதல்வர் பணியிடைநீக்கம்!