அக்டோபர் 5-ம் தேதி கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் ஒன்பது பேர் பலியான நிலையில், கேரள அரசு புதிய சட்டத்தை இயற்றியிருக்கிறது. போக்குவரத்து விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால், ஓட்டுநர்கள் சமூக மற்றும் மருத்துவ சேவை மேற்கொள்ள வேண்டும் என்பதை கேரள அரசு கட்டாயமாக்கியிருக்கிறது.விபத்துக்குள்ளான கேரளப் பேருந்து
இது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு செய்தியாளர்களிடம், ``போக்குவரத்துத்துறை சார்பில் உயர்மட்டக் கூட்டத்துக்குப் பிறகு, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயமாக மூன்று நாள்களுக்குக் குறையாமல் சிகிச்சை மையங்கள் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சைப் பிரிவுகளில், புதிய சட்டத்தின்படி, சேவைகளைச் செய்ய வேண்டும். மேலும், எடப்பாலில் இருக்கும் ஓட்டுநர் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.டி.ஆர்) மூன்று நாள்கள் கட்டாயப் பயிற்சி அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அவர்கள்மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்.போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆண்டனி ராஜு
மேலும், சட்டவிரோதமாக அதிக சத்தத்துடனான ஹாரன் பொருத்தும் இரு சக்கர வாகனங்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அக்டோபர் 5-ம் தேதி, வடக்கஞ்சேரியில் தனியார் சுற்றுலாப் பேருந்தும், கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தும் மோதிக்கொண்டதில் ஐந்து மாணவர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்தின் ஓட்டுநர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் இயக்கியதால்தான் விபத்து நிகழ்ந்தது" என்றார்.பாம்பன் பாலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; 8 பேர் காயம்! - போலீஸ் விசாரணை
http://dlvr.it/Sb6dGZ
Saturday, 15 October 2022
Home »
» போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு வித்தியாசமான தண்டனை! - புதிய சட்டம் இயற்றியது கேரள அரசு