இந்தி டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் வைசாலி தக்கர். இவர் நடித்துள்ள `யே ரிஷ்டா க்யா கெஹ்லதா ஹை' மற்றும் `சசுரல் சிமர் கா' போன்ற டிவி சீரியல்கள் மிகவும் பிரபலமாகும். அவர் கடைசியாக ரக்ஷாபந்தன் படத்திலும் நடித்திருக்கிறார். கடந்த ஓராண்டாக மும்பையை காலி செய்துவிட்டு இந்தூரில் தன் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்து வந்தார். அவர் இன்று திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். படுக்கை அறை நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த வைசாலியின் தந்தை கதவை உடைத்து பார்த்தபோது மின்விசிறியில் வைசாலி தூக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து தற்கொலை செய்த அறையை சோதித்து பார்த்தபோது கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தற்கொலைக்கான காரணம் குறித்து வைசாலி குறிப்பிட்டுள்ளார். அதனை பறிமுதல் செய்து மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைசாலி
வைசாலி கடந்த ஆண்டுதான் கென்யாவைச் சேர்ந்த டாக்டர் அபிநந்தன் சிங் என்பவரை திருமணம் செய்துகொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருந்தார். அதோடு கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடத்தவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா தொற்றை காரணத்தை காட்டி, மக்கள் இறந்து கொண்டிருக்கும்போது நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று கூறி திருமணத்தை ஒரே மாதத்தில் ரத்துவிட்டார். தற்போது அவர் திடீரென தற்கொலை செய்திருப்பது இந்தி டிவி நட்சத்திரங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் கடைசியாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வைசாலி வெளியிட்டிருந்தார். தூக்கு - தற்கொலை
சமூக வலைதளத்தில் ஏராளமான வீடியோக்களை வைசாலி வெளியிட்டு வந்தார். ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்குடன் வைசாலி நெருங்கிய நட்பு வைத்திருந்தார். தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தில் காதல் தோல்வி உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார். முன்னாள் காதலனின் சித்ரவதை காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்திருக்கவேண்டும் என்று இந்தூர் உதவி போலீஸ் கமிஷனர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். `பணக் கஷ்டம்... விவாகரத்து நோட்டீஸ்' - `மர்ம தேசம்' லோகேஷ் தற்கொலை குறித்து அவரின் தந்தை வேதனை!
http://dlvr.it/SbCKPt
Monday, 17 October 2022
Home »
» பிரபல இந்தி டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை - முன்னாள் காதலன் துன்புறுத்தல் காரணமா... போலீஸ் விசாரணை!