உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி நகரத்துக்கு வெளியில் செயல்படும் ரேயான் இண்டர்நேஷனல் பள்ளியின் பேருந்துகள் அங்குள்ள சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அந்நேரம் மலைப்பாம்பு ஒன்று அந்த கிராமத்தில் ஆட்டுக்குட்டி ஒன்றை அப்படியே சாப்பிட்டுவிட்டு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பள்ளிப் பேருந்தில் ஏறிக்கொண்டது. இதை நேரில் பார்த்த கிராம மக்கள் இது குறித்து பள்ளி ஊழியர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் பாம்பைப் பிடிக்க வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்து வரவழைத்தனர். வனத்துறை ஊழியர்கள் வந்தபோது பாம்பு இருக்கை ஒன்றுக்கு அடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. உடனே பாம்பைக் குச்சியால் குத்தி அதை அந்த இடத்திலிருந்து நகரும்படி செய்தனர். சீட்டுக்கு அடியில் பாம்பு
பாம்பு பிடிப்பவர்கள் அந்தப் பாம்பை சாக்குமூட்டைக்குள் அனுப்ப முயன்றனர். ஆனால் அந்தப் பாம்பு சாக்குமூட்டையை கடிக்க முயன்றது. வனத்துறையினரின் இந்த முயற்சியில் பாம்பு பஸ் இஞ்ஜினில் சிக்கிக்கொண்டது. இதனால் பாம்பை மீட்க அதன் உடலில் ஒரு கயிறு கட்டி வெளியில் இழுத்தனர். ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பாம்பு பிடிபட்டது. பாம்பை வனத்துறையினர் பத்திரமாக எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிப் பேருந்து, அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பள்ளிக்கு அருகில் வேறு இடத்தில் கொண்டு போய் நிறுத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பஃப்ரபரப்பு ஏற்பட்டது. ஆட்டுக்குட்டியைப் பாம்பு சாப்பிட்டது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனால் அது உண்மையா என்று தெரியவில்லை என்கிறார்கள் வனத்துறையினர்.
http://dlvr.it/SbGYwh
Tuesday, 18 October 2022
Home »
» உ.பி: முழு ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளிப் பேருந்தில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு!