போக்குவரத்து விதியின்படி இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அந்த வகையில், சாலை போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தநிலையில், முறையான ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ஒரு காவலருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிற சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெங்களூர் ஆர்.டி.நகரில் காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்துக்கு அணிய வேண்டிய ஹெல்மெட் அணியாமல், வேறு வகையான ஹெல்மெட் அணிந்து வந்திருக்கிறார். அப்போது வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் இதை கவனித்து அந்த காவலரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
Good evening sir
half helmet case booked against police
Tq pic.twitter.com/Xsx5UA40OY— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022
மேலும், அவர் முறையான ஹெல்மெட் அணியவில்லை என அந்த காவலருக்கு அபராதம் விதித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, இது தொடர்பான புகைப்படத்தை ஆர்.டி நகர் போக்குவரத்து காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து,"குட் ஈவினிங். முறையான ஹெல்மெட் அணியாத காவலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது," எனப் பதிவிட்டிருக்கிறது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. சிலர் காவல்துறையை பாராட்டியும், சிலர் இது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட படம்'' என விமர்சித்தும் வருகின்றனர்.நொய்டா: மதுபோதை; குடியிருப்பு காவலர்களை தாக்கிய 3 இளம்பெண்கள் - வெளியான வீடியோ; காவல்துறை நடவடிக்கை
http://dlvr.it/SbSND2
Friday, 21 October 2022
Home »
» பெங்களூர்: காவல்துறை அதிகாரிக்கே அபராதம் விதித்த காவலர் - ஏன் தெரியுமா?!