கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பான மேல்முறையீட்டு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது அரபி பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை எனப் புகார் எழுப்பப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வித்துறைக்கு மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.School
இது குறித்துப் பேசிய மாநில கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், ``அரபி பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் அங்கு படிக்கும் மாணவர்கள், மற்ற பள்ளி மாணவர்களுடன் போட்டிபோட முடியாமல் திணறுவதாக, கல்வித்துறைக்குப் புகார் வந்திருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் 106 அரசு உதவி பெறும் மற்றும் 86 உதவி பெறாத அரபி பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் பெரும்பாலான அரபி பள்ளிகள், கல்வித்துறையால் பரிந்துரைக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றவில்லை என்று ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்தோம்.கர்நாடக கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ்
மேலும் பல பள்ளிகளில் பிற மொழிகள் மற்றும் அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், மற்ற உதவி பெறும் பள்ளிகளுடன் ஒப்பிடும்போது, இந்தப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் ஒரே மாதிரியான கல்வியைப் பெறுவதில்லை.
ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 27,000 மாணவர்கள் இந்தப் பள்ளிகளில் சேருகிறார்கள். இருப்பினும், இங்கு இடைநிற்றல் விகிதம் மிக அதிகமாக இருப்பதால், 2,000 பேர் மட்டுமே 10-ம் வகுப்பு அடையும்போது தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர். இந்த நிலைமையை மறுபரிசீலனை செய்யுமாறு உதவி ஆணையரிடம் கூறியிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பிறகு அதன்மீது நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்திருக்கிறார்.கர்நாடகா: ரேஷன் அட்டைகளில் சர்ச்சையைக் கிளப்பிய இயேசு, லட்சுமி படங்கள்! - விளக்கமளித்த அதிகாரிகள்
http://dlvr.it/SbxCJg
Sunday, 30 October 2022
Home »
» கர்நாடகா: ``அரபி பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை" - அமைச்சர் பி.சி.நாகேஷ்