மத்தியப் பிரதேசத்தில் மார்க்கெட் ஒன்றில் இரண்டு சிறுவர்கள் பணத்தைத் திருடியதாகக் கூறி லாரியின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தூரிலுள்ள சோய்த்ரம் மார்க்கெட்டுக்கு வந்த காய்கறிகளை இறக்கும்போது சிறுவர்கள் இருவர் லாரியில் வைத்திருந்த பணத்தை எடுப்பதைப் பார்த்ததாக லாரி ஓட்டுநர் ஒருவர் கூறியிருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த வியாபாரிகளும், லாரி ஓட்டுநரும் சிறுவர்களை சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அதன் பிறகு, லாரியின் பின்புறம் சிறுவர்களின் கால்களை கயிற்றில் கட்டி உடல்கள் சாலையில் தேயும்படியாக இழுத்துச்சென்றனர்.சிறுவர்களை அடித்து லாரியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து அங்கு விரைந்த போலீஸார், சிறுவர்களை வியாபாரிகளிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதைத் தொடர்ந்து, போலீஸார் சிறுவர்களை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவுசெய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், சிறுவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.எமனாக வந்த லாரி; உடல் நசுங்கி உயிரிழந்த சகோதரிகள் - தந்தையும் படுகாயம்... ஆம்பூரில் சோகம்!
http://dlvr.it/SbzLxr
Monday, 31 October 2022
Home »
» ம.பி: பணம் திருடியதாக குற்றச்சாட்டு; சிறுவர்களை தாக்கி லாரியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரம்!