கர்நாடகாவில் ஊபர், ஓலா, ரேபிடோ ஆட்டோ சேவையை மூன்று நாள்களில் முழுமையாக நிறுத்துமாறு மாநில போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இது தொடர்பாக குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மாநில போக்குவரத்துதுறை அறிக்கை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதில், ``அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக வந்த புகார்களை அடுத்து கர்நாடக போக்குவரத்துத் துறை இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஓலா, ஊபர், ரேபிடோ நிறுவனங்களில் இணைக்கப்பட்டு மாநிலத்தில் ஓடும் ஆட்டோக்களின் சேவையை மூன்று நாள்களில் முழுமையாக நிறுத்த வேண்டும்.ஓலா ஆட்டோ
பயணிகள், 2 கிலோமீட்டர் மட்டுமே தொலைவு கொண்ட பயணத்துக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டியிருப்பதாகப் புகார் அளிக்கின்றனர். எனவே, ஆட்டோ சேவையை நிறுத்துவதுடன் டாக்ஸி உள்ளிட்ட சேவைகளுக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது. இந்த உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. "சிங்கிள் சார்ஜில் 200 கி.மீ ஓட்டினால்... ஓலா ஸ்கூட்டர் பரிசு! - ஓலா தொழிற்சாலைக்கு நேரடி விசிட்!
http://dlvr.it/SZmC0w
Sunday, 9 October 2022
Home »
» மாநிலத்தில் ஊபர், ஓலா, ரேபிடோ ஆட்டோ சேவையை நிறுத்தச் சொன்ன கர்நாடக அரசு! - காரணம் என்ன?